TECNO Spark 5 Pro , 5000Mah பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம்.

Updated on 15-Jul-2020
HIGHLIGHTS

டெக்னோ பிராண்டின் புதிய ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய நச்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது

டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்கள் மற்றும் 5000 Mah பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

டெக்னோ பிராண்டின் புதிய ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய நச்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்

– 6.6 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி+ 20:9 ரக 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலோ ஏ25 12nm பிராசஸர்
– IMG பவர்விஆர் GE8320 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 ஹை ஒஎஸ் 6.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் எல்இடி ஃபிளாஷ்
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 2 எம்பி டெப்த், ஏஐ கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டிடிஎஸ் ஹெச்டி சரவுண்ட் சவுண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங் 

இத்துடன் 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் ஏஐ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், டெக்ஸ்ச்சர் டிசைன், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்கள் மற்றும் 5000 Mah  பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

விலை மற்றும் விற்பனை தகவல்.

டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐஸ் ஜடைட், ஸ்பார்க் ஆரஞ்சு மற்றும் சீபெட் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 10499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் ஆன்லைன் மற்றும் நாடு முழுக்க 35 ஆயிரத்திற்கும் அதிக விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :