Tecno யின் புதிய Tecno Pova Curve 5G சமிபத்தில் அறிமுகம் செய்தது
இந்த போன் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது
இதற்கு 10 சதவீத பேங்க் தள்ளுபடி கிடைக்கும். மேலும், மாதாந்திர இஎம்ஐ ரூ.1,006க்கு கிடைக்கும்.
Tecno Pova Curve 5G with curved screen and fast processor launched
Tecno யின் புதிய Tecno Pova Curve 5G சமிபத்தில் அறிமுகம் செய்தது, இதனை தொடர்ந்து இந்த போனை முதல் முறையாக விற்பனைக்கு இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இந்த சிறப்புவிற்பனையின் மூலம் இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் MediaTek Dimensity 7300 Ultimate ப்ரோசெசர்இருக்கிறது மேலும் இதன் விலை மற்றும் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Tecno Pova Curve 5G ஆபர் விலை மற்றும் டிஸ்கவுண்ட்
டெக்னோ போவா கர்வ் 5ஜி விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் தொடங்கும். இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.15,999. இதன் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் ரூ.16,999க்கு கிடைக்கிறது. இதற்கு 10 சதவீத பேங்க் தள்ளுபடி கிடைக்கும். மேலும், மாதாந்திர EMI ரூ.1,006க்கு கிடைக்கும்.
TECNO POVA Curve 5G போனில் 6.78-இன்ச் கொண்ட FHD+ கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, மேலும் இதில் 144Hz ரெப்ராஸ் ரெட்டுடன் மற்றும் இதில் 240Hz டச் செம்பளிங் ரேட் வழங்குகிறது மேலும் இதன் பாடி ரேசியோ 93.8% இருக்கிறது, இதனுடன் இந்த போன் bold மற்றும் க்ளாசி மெல்லிய மற்றும் 188g இடை கையில் பிடிக்க பெஸ்ட்டாக இருக்கிறது .
இந்த போனில் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் IP64 ரேட்டிங் உடன் இந்த விலைக்கு இது பெஸ்ட்டாக இருக்கும்
இப்பொழுது இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் MediaTek Dimensity 7300 Ultimateசிப்செட் உடன் இது 4nm ப்ரோசெசரின் கீழ் இயங்குகிறது மேலும் இது 6GB+128GB மற்றும் 8GB+128GB ரேம் ஸ்டோரேஜ் வகையில் வருகிறது மேலும் இது தினசரி வீடியோ,கேமிங் அதாவது BGMI போன்றவைக்கு ஸ்மூதாக செயல்படும்
Tecno Pova Curve 5G யின் இந்த போனில் 5,500mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
இந்த போனில் கேமரா பற்றி பேசுகையில் இதில் 64MP ப்ரைமரி Sony IMX682 கேமரா சென்சார், செகண்டரி சென்சார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இந்த போனில் 13MP முன் சென்சாருடன் வருகிறது.
இரண்டு விஷயத்தை தவிர்க்கலாம்
1 Tecno Pova Curve 5G போன் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது ஆனால் மைக்ரோ SD கார்ட் இல்லை 4K videos அல்லது பெரிய பெரிய ஆப் போன்றவை இன்ஸ்டால் செய்யலாம்
2.Tecno Pova Curve 5G இந்த போனில் ஆண்ட்ரோய்ட் 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது டெக்னோ வெறும் 1 ஆண்டு OS அப்டேட் மட்டுமே வழங்குகிறது ஆனால் மற்ற samsung போன்ற போன்களில் 3 லிருந்து 4 ஆண்டு வரை OS அப்டேட் வழங்குகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.