Tecno அதன் புதிய Tecno Phantom V2 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது,. இந்த சீரிஸின் கீழ் இரண்டு போங்கள் கொண்டுவரப்பட்டது அவை Phantom V Fold 2 மற்றும் Phantom V Flip 2, ஆகியவை ஆகும். இது மிக சிறந்த த்யுரபிளிட்டி மற்றும் ஸ்லீக் டிசைன் ஆகும் மேலும் இந்த போனின் விலை மற்றும் டாப் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க
TECNO PHANTOM V Flip 2 விலை ரூ.34,999. PHANTOM V Fold 2 யிந் விலை ரூ.79,999. அவற்றின் விற்பனை டிசம்பர் 13 முதல் அமேசானில் தொடங்கும்.
டிஸ்ப்ளே:-டெக்னோவின் PHANTOM V Fold 2 5G ஆனது 2296 x 2000 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 7.85 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது வழங்குகிறது. வெளிப்புறத்தில் 6.42 இன்ச் FHD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது.
ப்ரோசெசர் மற்றும் ரேம் ஸ்டோரேஜ்:-PHANTOM V Fold 2 5G ப்ரோசெசர் பற்றி பேசினால் மீடியாடேக் டிமான்சிட்டி 9000+ ப்ரோசெசர் உடன் வருகிறது இதை தவிர இதில் 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வழங்குகிறது
கேமரா:-இந்த போனின் கேமரா பற்றி பேசினால் இதில் OIS சப்போர்டுடன் 50MP ப்ரைம் கேமரா உள்ளது. 50MP போர்ட்ரெய்ட் லென்ஸில் 2X ஆப்டிகல் ஜூம் மற்றும் 20X டிஜிட்டல் ஜூம் உள்ளது. இது தவிர, 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் இரண்டு 32 செல்பி எம்பி கேமராக்கள் உள்ளன.
பேட்டரி மற்றும் சார்ஜிங் :-புதிய டெக்னோ போன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 14ல் இயங்குகிறது. இது 5750mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 70W அல்ட்ரா சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இந்த போன் க்ரஸ்ட் க்ரீன் மற்றும் ரிப்பளிங் ப்ளூ கலர்களில் வருகிறது.
டிஸ்ப்ளே:-PHANTOM V Flip2 5G யின் டிஸ்ப்ளே 6.9 இன்ச் மற்றும் ரேசளுசன் 1080 x 2640 பிக்சல் இருக்கிறது, மேலும் இதன் வெளிப்புற டிஸ்ப்ளே 3.64 கவர் இருக்கிறது
ப்ரோசெசர்:-இந்த போனில் MediaTek யின் dimansity 8020 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 256 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
கேமரா:-PHANTOM V Flip 2 5G இல் 50MP ப்ரைம் கேமரா, 50MP அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன் கேமரா 32 எம்.பி.வழங்கப்படுகிறது.
பேட்டரி:-போனில் Wi-Fi 6 மற்றும் புளூடூத் v5.3 கனேக்சனுடன் வருகிறது. போனின் எடை 196 கிராம். இது 4720mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 70W அல்ட்ரா சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இந்த ஃபோனும் இரண்டு கலர்களில் வருகிறது.
இதையும் படிங்க:OnePlus 13 தேதி அறிமுக தேதி வெளியாகவில்லை, ஆனால் Amazon விற்பனயாகும்