Samsung Galaxy Note 10 ஆகஸ்ட் 5 யில் அறிமுகமாகும்

Updated on 06-Jul-2020
HIGHLIGHTS

Galaxy Note 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகமாகும்

கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, சிறிய பன்ச் ஹோல் ஸ்மார்ட்போனின் மத்தியில் பொருத்தப்படுகிறது

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியகி உள்ளது. முந்தைய தகவல்களிலும் இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 5 இல் அறிமுகமாகும் என்றே கூறப்பட்டது. 
 
முந்தைய வழக்கப்படி சாம்சங் இதே ஆண்டும் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை ஆகஸ்ட் 5 இல் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 20, நோட் 20 பிளஸ், நோட் 29 அல்ட்ரா உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, சிறிய பன்ச் ஹோல் ஸ்மார்ட்போனின் மத்தியில் பொருத்தப்படுகிறது. இத்துடன் மெல்லிய பெசல்கள், வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் மொபைலின் வலது புறத்தில் வழங்கப்படுகிறது.

மேலும் இவற்றுடன் கேலக்ஸி ஃபோல்டு 2, புதிய கேலக்ஸி வாட்ச் மற்றும் கேலக்ஸி டேப்லெட் போன்ற சாதனங்களும் இதே விழாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 2020 கேலக்ஸி அன்பேக்டு விழா ஆன்லைனில் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியானது. 

ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் மற்றும் எஸ் பென் வைப்பதற்கான ஸ்லாட் வழங்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது. இது பார்க்க கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :