Samsung Galaxy Z TriFold
Samsung அதன் Samsung Galaxy Z TriFold போனை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த Galaxy Z TriFold யில் மூன்று கேமரா யூனிட் இருக்கிறது மேலும் இதில் 10.0-inch QXGA+ Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே மற்றும் Qualcomm’s Snapdragon 8 Elite ப்ரோசெசர் மேலும் இதன் விலை தகவல் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Samsung Galaxy Z TriFold யின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தனது முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் டிசம்பர் 12 ஆம் தேதி தென் கொரியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறது. புதிய கைபேசி பின்னர் சீனா, தைவான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற உலகளாவிய சந்தைகளில் வாங்குவதற்குக் கிடைக்கும். மேலும், இது சிங்கிள் கிராஃப்டட் பிளாக் நிறத்தில் அனுப்பப்படும்.
மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ரீடைளர் விற்பனைக் கடைகளில் புதிய கேலக்ஸி இசட் ட்ரைஃபோல்ட் கிடைக்கும் என்றும், வாடிக்கையாளர்கள் இந்த கைபேசியைப் பயன்படுத்தி நேரடி அனுபவத்தைப் பெற முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது . இந்த கைபேசியின் விலை வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy Z TriFold என்பது ஆண்ட்ராய்டு 16-அடிப்படையிலான OneUI 8 இல் இயங்கும் இரட்டை சிம் போல்டபில் ஸ்மார்ட்போன் ஆகும். இது உள்ளே 10-இன்ச் QXGA+ (2,160×1,584 பிக்சல்கள்) டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவுடன் பொருத்தப்பட்டுள்ளது, 269ppi பிக்சல் டென்சிட்டி , 1600nits வரை ஹை ப்ரைட்னஸ் மற்றும் 120Hz ரெப்ரஸ்ரேட்டுடன் வருகிறது. கூடுதலாக, இதன் இன்டெர்னல் டிஸ்ப்ளே 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்டையும் சப்போர்ட் செய்கிறது .
அதன் முன் பக்கத்தில் 6.5-inch முழு -HD+ (1,080×2,520 பிக்சல்) ரெசளுசன் AMOLED 2X கவர் டிஸ்ப்ளே 21:9 ஈஸ்பெக்ட் ரேசியோ வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 2600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் இதில் 120HZ ரெப்ரஸ் ரேட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:வெயிட்டிங் ஓவர் ஒட்டு மொத்த மக்களும் எதிர்பார்த்த Vivo யின் புதிய போன் அறிமுகம் விலை தான் ஐபோனுக்கே டஃப் கொடுக்கும்
Samsung Galaxy Z TriFold அப்டேட் செய்யப்பட்ட ஆர்மர் அலுமினியத்துடன் இணைக்கப்பட்ட டைட்டானியம் கீல் கொண்டுள்ளது. இது இரண்டு வெவ்வேறு அளவிலான கீல்கள் மற்றும் இரட்டை-ரயில் போன்ற ஸ்ட்ரக்ஜர் வழங்குகிறது, இது அப்டேட் செய்யப்பட்ட ஸ்டேண்டர்ட் மற்றும் ஸ்மூதான ரொடேஷன் வழங்குவதாகக் கூறப்படுகிறது. கீல் ஸ்க்ரீன்கள் “குறைந்தபட்ச இடைவெளியுடன் பாதுகாப்பாக சந்திக்க” அனுமதிக்கிறது, அதே நேரத்தில் ஒரு மெல்லிய டிசைனுடன் பராமரிக்கிறது என்று சாம்சங் மேலும் கூறியது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போனை இயக்குவது குவால்காமின் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் கேலக்ஸி சிப்செட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 16 ஜிபி ரேம் மற்றும் 1TB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
கேமராவுக்கு , Samsung Galaxy Z TriFold ஆனது 200-மெகாபிக்சல் (f/1.7) ப்ரைமரி கேமரா, 102-டிகிரி வியுவ் உடன் கூடிய 12-மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமரா மற்றும் OIS மற்றும் 30x வரை டிஜிட்டல் ஜூம் பவர்களை கொண்ட 10-மெகாபிக்சல் (f/2.4) டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றை மூன்று பின்புற கேமரா மாட்யுல் கொண்டுள்ளது.
Samsung Galaxy Z TriFold 5,600mAh பேட்டரியுடன் 45W வயர்ட் மற்றும் 15W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் கனேக்டிவிட்டிக்கு 5G, 4G LTE, Wi-Fi 7, போன்ற சப்போர்ட் வழங்கப்படுகிறது.