samsung
நீங்க புதிய போல்டபில் போனை வாங்க நினைத்தால் இது பெஸ்ட் ஆப்சனாக இருக்கும் Samsung Galaxy Z Fold 7 இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, Galaxy Z Fold 6 5G மிக பெரிய அளவில் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதில் கஸ்டமர்களுக்கு அதிகபட்சமாக ரூ,40,500 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
அதாவது Samsung யின் இந்த போன் கடந்த ஆண்டு ரூ,1,64,999 யில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ, 1,24,499ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் பல ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
அமேசான் நிறுவனம் Samsung Galaxy Z Fold 6 5G-ஐ ரூ.1,25,999 விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இது அதன் உண்மையான விலையிலிருந்து கிட்டத்தட்ட ரூ.40,500 குறைவு. SBI, HDFC, OneCard மற்றும் பல பேங்க் கார்ட்களை பயன்படுத்தும்போது, கஸ்டமர்கள் ரூ.1,250 வரை தள்ளுபடி பெறலாம், இதன் மூலம் விலை ரூ.1,24,749 ஆகக் குறைகிறது. EMI மற்றும் நோ-காஸ்ட் EMI விருப்பங்கள் இரண்டும் மாதத்திற்கு ரூ.6,036 யில் தொடங்கி கிடைக்கின்றன,
இதையும் படிங்க:Vivo யின் புதிய போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க
நீங்கள் பயன்படுத்தும் வேலை நிலைமைகள் மற்றும் மாதிரியைப் பொறுத்து வாங்குபவர்கள் ரூ.48,550 வரை எக்ஸ்சேஞ் வேல்யூ பெறலாம். நீங்கள் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் , கூடுதல் நீட்டிக்கப்பட்ட வாராண்டி, ஸ்க்ரீன் சேத பாதுகாப்பு மற்றும் பலவற்றையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
Samsung Galaxy Z Fold 6 5G ஆனது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 7.6-இன்ச் AMOLED 2X தெளிவான பேனலையும் 6.3-இன்ச் AMOLED 2X கவர் ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இந்த போனில் Snapdragon 8 Gen 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த போனில் கேமரா உள்ளமைவில் 50MP ப்ரைமரி கேமரா, 12MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், இந்த சாதனம் சிவர் ஸ்க்ரீனில் 10MP செல்ஃபி கேமராவையும், காட்சிக்குக் கீழே 4MP கேமராவையும் கொண்டுள்ளது.
இது 12 GB RAM மற்றும் 1TB வரை ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போன் 25W சார்ஜிங் கொண்ட 4400mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.