SAMSUNG GALAXY Z FLIP இந்தியாவில் முன் புக்கிங் ஆரம்பம் இதன் விலை என்ன தெரிஞ்சிக்கோங்க.

Updated on 21-Feb-2020
HIGHLIGHTS

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய விலையை சாம்சங் அறிவித்துள்ளது. இந்தியாவில் கேலக்ஸி இசட் ஃபிளிப் விலை ரூ. 1,09,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு 2020 விழாவில் அறிமுகம் செய்தது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் விலை இந்தியாவில் ரூ .1,09,999. பிப்ரவரி 26 முதல் மடிக்கக்கூடிய போனை வெளியிடுவதாகவும் பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. ஆர்வமுள்ள வாங்குபவர்கள் கேலக்ஸி இசட் ஃபிளிப்பை சாம்சங் மின் கடை மூலம் முன்பதிவு செய்யலாம்.

அந்த வகையில், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய விலையை சாம்சங் அறிவித்துள்ளது. இந்தியாவில் கேலக்ஸி இசட் ஃபிளிப் விலை ரூ. 1,09,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு பிப்ரவரி 21-ம் தேதி துவங்குகிறது. சாம்சங் இ ஸ்டோரில் வாங்குவோருக்கு பத்து நகரங்களில் பிரீமியம் வைட் குளோவ் டெலிவரி செய்யப்படும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு விபத்து காப்பீடு, ஒரு முறை ஸ்கிரீன் பாதுகாப்பு, ஒரு வருடத்திற்கு சாம்சங் கேர் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதில் ஒருமுறை ஸ்கிரீன் பாதுகாப்பு சேவை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்கப்படுகிறது.

இதுதவிர நான்கு மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் சேவைக்கான சந்தா மற்றும் அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

SAMSUNG GALAXY Z FLIP சிறப்பம்சம்.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த டிஸ்ப்ளேவினை இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் என அழைக்கிறது. இதில் மிக மெல்லிய கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை 200,000 அதிக முறை மடிக்க முடியும்.

மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டா கோர் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமராக்கள்: 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2 வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4 வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் வெளி்ப்புறம் 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 300×112 ரெசல்யூஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் கவர் டிஸ்ப்ளே மோட்டோரோலா ரேசர் மாடலை போன்றே நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கிறது. இதில் பிரத்யேக ஃபிளெக்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் செயலிகளை பாதியாக பிரித்து, கீழ்புறம் கண்ட்ரோல்கள் கொண்டது.

இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :