Samsung Galaxy S25 Ultra
நீங்கள் Samsung பிரியராக இருந்தால் Samsung Galaxy S25 Ultra 5G போனில் தற்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,i1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் விலை ரூ,1,29,999 ஆகும் ஆனால் இப்பொழுது இந்த போனை மிக சிறந்த டிச்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனில் 200MP கேமரா மட்டுமில்லாமல் S பேன் மற்றும் நீண்ட நாள் பேட்டரி லைப் போன்றவற்றை வழங்குகிறது மேலும் இதன் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Samsung Galaxy S25 Ultra 5G போனின் விலை அமேசானில் ரூ,1,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை HDFC கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,11,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,1,18,999க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் amazon pay பயன்டுத்தி வாங்கினால் ரூ,3,899 வரை கேஷ்பேக் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இதில் நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க அதிர வைக்கும் ஆபர் Motorola யின் இந்த போனில் அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட்
Samsung Galaxy S25 Ultra 5G ஆனது 6.9-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவை 1400×3120 பிக்சல்கள் ரெசளுசன் , 120hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2600 nits வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ரோசெசர் உள்ளது. Galaxy S25 Ultra ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 7 யில் இயங்குகிறது. Galaxy S25 Ultra ஆனது 12GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 3.2 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை microSD கார்ட் வழியாக 1TB வரை அதிகரிக்கலாம் .
Galaxy S25 Ultra-வின் பின்புறம் 2x இன்-சென்சார் ஜூம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்டுடன் 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா, 5x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. Galaxy S25 Ultra ஆனது Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, UWB, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது.