Samsung Galaxy S23 Ultra Amazon
நீங்கள்Samsung பிரியராக இருந்தால் இந்த புதிய ப்ளாக்ஷிப் ஆன Samsung Galaxy S23 Ultra 5G போனை குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இப்பொழுது இந்த போனுக்கு இ-காமர்ஸ் தளமான அமேசானில் அதிரடியாக ரூ,35,000 டிஸ்கவுண்ட் வழங்குகிறது, அதாவது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,82,500க்கு வாங்கலாம் மேலும் இந்த போன் AI features மற்றும் S Pen அம்சத்துடன் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ராவின் டாப்-எண்ட் 12ஜிபி + 512ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.84,999 ஆகும். இந்த போன் ரூ.1,34,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் பொதுவாக சாம்சங் ரீடைளர் விற்பனைக் கடைகளில் சுமார் ரூ.1,20,000 விலையில் கிடைக்கிறது. அமேசான் பே ICICI பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம் கஸ்டமர்கள் ரூ.2,549 வரை சேமிக்கலாம், இதன் மூலம் விலை ரூ.82,500க்குக் கீழே குறையும்.
இந்த தளம் மாதத்திற்கு ரூ.4,121 முதல் தொடங்கும் EMI விருப்பங்களையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் பேங்க் கார்ட்களில் அடிப்படையில் நோ கோஸ்ட் EMI தேர்வு செய்யலாம். கூடுதலாக, வாங்குபவர்கள் கூடுதல் செலவில் Samsung Care+ மற்றும் Screen Damage Protection ஐயும் தேர்வு செய்யலாம்.
இதையும் படிங்க itel புதிய போன் அறிமுகம் ஆபர் சலுகையுடன் இதை வெறும் ரூ,8299க்கு வாங்கலாம் மேலும் அம்சங்களை பாருங்க
கடைசியாக, உங்கள் பழைய போனை மாற்ற விரும்பினால், நீங்கள் பயன்படுத்தும் போன் மற்றும் அதன் வேலை நிலைமைகளைப் பொறுத்து ரூ.61,150 வரை பெறலாம்
Samsung Galaxy S23 Ultra 5G ஆனது 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.8-இன்ச் AMOLED பேனலைக் கொண்டுள்ளது. இந்த போன் 1,750 nits ஹை ப்ரைட்னாஸ் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பையும் வழங்குகிறது, இது ஒரு நீடித்த விருப்பமாக அமைகிறது. இந்த போனில் Snapdragon 8 Gen 2 ஆல் இயக்கப்படுகிறது, இந்த போனில் இப்போது Android 15-அடிப்படையிலான One UI 7 உடன் வருகிறது, மேலும் Circle to Search உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட AI அம்சங்களையும் சேர்த்துள்ளது. இது 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
இது ஒரு குவாட் கேமராவை வழங்குகிறது – 200MP முதன்மை சென்சார், 12MP அல்ட்ராவைடு, 10MP டெலிஃபோட்டோ மற்றும் 10MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ. இது 12MP செல்ஃபி கேமராவையும் வழங்குகிறது