ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் சாம்சங் தனது எஸ் சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.சாம்சங் நிறுவனத்தின் 2020 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கின்றன.
.அதன்படி குவால்காம் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் இதுவரை அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 865 மற்றும் எக்சைனோஸ் 9830 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி S11 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. புதிய விவரங்கள் ஒன் யு.ஐ. 2.0 பீட்டாவில் இருந்து வெளியாகியுள்ளது
2020 கேலக்ஸி S சீரிஸ் மொத்தம் மூன்று மாடல்களில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. இவற்றில் ஒரு மாடலில் 5ஜி வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் LPDDR5 ரேம் மற்றும் UFS 3.0 மெமரி கொண்டிருக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் சாம்சங் இதே வழக்கத்தை பின்பற்றி வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் டிசம்பர் மாதம் நடைபெறும் வருடாந்திர தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சாம்சங் 9830 பிராசஸர் ஒன்றிரண்டு மாதங்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.