SAMSUNG GALAXY S10 LITE மொபைல் போன் GEEKBENCH யில் அம்சம் லீக் ஆகியுள்ளது.

Updated on 31-Oct-2019
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்த வெர்ஷன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்த வெர்ஷன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி எஸ் 10 சீரிஸ் விலை குறைந்த மாடல்களை சாம்சங் உருவாக்கி வருகிறது.

இந்த தகவல்களில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளது.இம்மாத துவக்கத்தில் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியான நிலையில், தற்சமயம் SM-G770F எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை சிங்கில் கோரில் 724 புள்ளிகளும், மல்டி கோரில் 2604 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஃபுல் HD. பிளஸ் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் பார்க்க கேலக்ஸி ஏ91 போன்று காட்சியளிக்கும் என கூறப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை 

வழக்கமான கேலக்ஸி எஸ்10 மாடலை விட எக்சைனோஸ் அல்லது ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்ட வேரியண்ட்களை விட அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம்.

இதன் டிஸ்ப்ளே கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10இ போன்று பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா, 48 எம்.பி. பிரைமரி சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :