Samsung Galaxy Note யின் குறைந்த விலையில் இருக்கும்.

Updated on 26-Sep-2019

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனின் சிறிய வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 சீரிசில் இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது. இவை கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் பெயரில் முறையே 6.3 மற்றும் 6.8 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டன.

கேலக்ஸி நோட் சிறிய வெர்ஷன் SM-N770F எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் எதிர்காலத்தில் இரு மாடல்களுடன் மற்றொரு மாடலை புதிதாக அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

முன்னதாக 2014 ஆம் ஆண்டு சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி நோட் 3 நியோ மாடலில் SM-N750 எனும் பெயர் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் SM-N770F என்ற பெயரில் உருவாகும் புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 3 நியோவின் மேம்பட்ட மாடலாக வெளியாகும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

இந்த நம்பரில் N என்ற எழுத்தே ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் சீரிஸ் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி நோட் சீரிஸ் மாடல்கள் SM-N9xx என்ற மாடல் நம்பர்களை கொண்டிருந்தன.

புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எந்தளவு குறைவாக இருக்கும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் என்பதால் இதில் எஸ் பென் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :