சைலண்டாக இந்தியாவில் Samsung புதிய போன் 6,000mAh பேட்டரியுடன் அறிமுகம்

HIGHLIGHTS

Samsung இந்தியாவில் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் Samsung Galaxy M47 5G போனை அறிமுகம்

இந்த போனில் 50MP மெயின் கேமரா மற்றும் பெரிய 6,000mAh பேட்டரியுடன் வருகிறது

இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

சைலண்டாக இந்தியாவில் Samsung புதிய போன் 6,000mAh பேட்டரியுடன் அறிமுகம்

Samsung இந்தியாவில் இன்று அதன் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் Samsung Galaxy M47 5G போனை அறிமுகம் செய்தது. இந்த போனில் 50MP மெயின் கேமரா மற்றும் பெரிய 6,000mAh பேட்டரியுடன் இதில் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy M47 விலை தகவல்.

Samsung Galaxy M47 5G போனின் ஆரம்ப விலை ரூ,22,999 மேலும் இதில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபர்கள் கொண்டிருக்கும் இந்த போனின் விற்பனையானது ஜூலை 4 அன்று amazon மற்றும் அதிகாரபூர்வ வெப்சைட்டில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த போனை Rogue Red Blaze Blue கலரில் வாங்கலாம்.

Samsung Galaxy M47 சிறப்பம்சம்.

Samsung Galaxy M47 போனில் 6.7-இன்ச் ஃபுல் HD+ சூப்பர் AMOLED பிளேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்புடன் கூடிய டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே, மென்மையான ஸ்க்ரோலிங் அனுபவம், மேம்படுத்தப்பட்ட கேமிங் அனுபவம் மற்றும் வீடியோக்களைப் பார்க்கும் அனுபவத்தை உறுதியளிக்கிறது. இந்த ஃபோன், ஸ்னாப்டிராகன் பிராசஸர், LPDDR5X ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. இந்த இணைப்பு, மல்டிடாஸ்கிங், கேமிங் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு பாஸ்ட் பர்போமான்ஸ் வழங்க உதவுகிறது.

கேமரா அம்சங்கள் பொறுத்தவரை கேலக்ஸி எம்47 5ஜி-யில் 50MP ப்ரைமரி கேமரா, 5MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக , இதில் 12MP முன்பக்க கேமரா உள்ளது.

இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால், இதில் 6,000mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் பைபாஸ் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது இது கேமிங்கின் போது பேட்டரியின் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பெரிய அளவிலான பேட்டரி இருப்பதால், ஒரே முறை சார்ஜ் செய்வதன் மூலம் இந்தத் போன் நாள் முழுவதும் எளிதாகச் செயல்படும்.

இதையும் படிங்க பக்கவான ஆஃபர் Infinix புதிய ஸ்டைலிஷ் Pininfarina லிமிடெட் எடிசனின் முதல் விற்பனை

சாப்ட்வேர் அப்டேட் கொண்டிருக்கும்.

இந்த போனில் Samsung One UI யில் இயங்குகிறது, இதில் AI போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது. இதில் Object Eraser, Edit Suggestion மற்றும் My Filter போன்ற டூல்ஸ் ஆகியவை அடங்கியுள்ளது. இது போட்டோ எடிட்டிங் மட்டுமல்லாமல், சோசியல் மீடியா கன்டென்ட் போன்றவற்றுக்கு சிறப்பாக வேலை செய்யும், மேலும் இதில் நீட சாப்ட்வேர் அப்டேட் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) மற்றும் பாதுகாப்பு (security) அப்டேட்களை வழங்குவதாக சாம்சங் உறுதியளிக்கிறது. நீங்கள் இந்தத் தொலைபேசியை நீண்ட ஆண்டுகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தால், இது ஒரு முக்கிய சாதகமான அம்சமாக அமையலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile