சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டீசரை சாம்சங் தனது அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் அமேசானில் வெளியிட்டுள்ளது.
சாம்சங் எம் சீரிசில் நான்காவது மாடலாக கேலக்ஸி M40 ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M10, கேலக்ஸி M20 மற்றும் கேலக்ஸி M30 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இதுவரை சாம்சங் வெளியிட்ட M சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் வழங்கப்பட்ட நிலையில், இவற்றுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கும் பணிகளை சாம்சங் துவங்கி இருக்கிறது.
இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா உள்ளிட்டவை புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன.
இத்துடன் புதிய கேலக்ஸி M40 ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் சாம்சங் தனது வெப்சைட் மற்றும் அமேசானில் வெளியிட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் LED ஃபிளாஷ் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 5000Mah பேட்டரி, 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் சார்ந்த ஒன் யு.ஐ. வழங்கப்படலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.