6000mAh பேட்டரி கொண்ட அசத்தலான Samsung Galaxy M32 ஸ்மார்ட்போன் அறிமுகம்.

Updated on 22-Jun-2021
HIGHLIGHTS

Samsung Galaxy M32 இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Samsung Galaxy M32 இ-காமர்ஸ் தளமான அமேசான் இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ளது

முழு HD + டிஸ்ப்ளே சக்திவாய்ந்த பேட்டரியைப் வழங்குகிறது

Samsung Galaxy M32  இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை, மேலும் இந்த சாதனம் இ-காமர்ஸ் தளமான அமேசான் இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் போனில் பல அம்சங்கள் வெளிவந்துள்ளன. ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் மற்றும் முழு HD + டிஸ்ப்ளே சக்திவாய்ந்த பேட்டரியைப் வழங்குகிறது . போனில் செல்பி மற்றும் வீடியோ காலிங்க்கு 20 எம்பி முன் கேமரா உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்32  சிறப்பம்சங்கள்.

 புதிய கேலக்ஸி எம்32 மாடலில் 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி யு டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1, நாக்ஸ் செக்யூரிட்டி, சாம்சங் பே மினி, செக்யூர் போல்டர், ஆல்ட் இசட் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்ற அம்சங்கள் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல் பிளாக் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளம், சில்லறை விற்பனை மையங்களில் ஜூன் 28 ஆம் தேதி துவங்குகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :