amsung Galaxy M17e 5G
நீங்கள் Samsung பிரியராக இருந்தால், இது நல்ல செய்தியாக இருக்கும், சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய பட்ஜெட் மாடலான Samsung Galaxy M17e 5G-ஐ இந்தியாவில் அறிமுக தேதி தகவல் வெளியாகியுள்ளது . இந்த மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் அதன் சில அம்சங்களும் வெளியிட்டுள்ளது.
Samsung தனது வரவிருக்கும் மாடலான Galaxy M17e 5G மார்ச் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த போன் அமேசான் பிரத்யேகமாக இருக்கும். நிறுவனம் அதிகாரப்பூர்வ தளத்திலும் அமேசானிலும் மைக்ரோசைட் பக்கத்தை நேரடியாக வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்படும்: வைப் வயலட் மற்றும் பிளிட்ஸ் ப்ளூ.
நேரடி மைக்ரோசைட் பக்கத்தின்படி, கேலக்ஸி M17e 5G ஆனது 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 6.7-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே ப்ரைட்னஸ் மற்றும் ஹை ப்ரைட்னஸ் மோடை (HBM) சப்போர்ட் செய்யும், இது சரவுண்டிங் வெளுச்சம் அடிப்படையில் ஸ்க்ரீனின் ப்ரைட்னஸ் தானாகவே சரிசெய்யும்.
டிசைனை பொறுத்தவரை, இந்த போன் 8.2 mm திக்னஸ் கொண்டதாகவும், கிளாஸ் இழை வலுவூட்டப்பட்ட பாலிமர் (GFRP) பின்புற பேனலைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இது IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது டஸ்ட் -ரெசிஸ்டன்ட் ஸ்ப்லாஷ் ப்ரூப் உடன் வருகிறது.
Samsung Galaxy M17e 5G ஆனது MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படும். இந்த சிப்செட்டில் இரண்டு Cortex-A76 பர்போமான்ஸ் கோர்கள் (2.4GHz) மற்றும் ஆறு Cortex-A55 பர்போமான்ஸ் கோர்கள் (2.0GHz) உள்ளன. கிராபிக்ஸைப் பொறுத்தவரை, இது ARM Mali-G57 GPU கொண்டுள்ளது, இது வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் சாதாரண கேமிங் போன்ற வேலைகளை எளிதாகக் கையாள முடியும்.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன் யுஐ 8 யில் இயங்கும். இந்த போன் ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட்கள் மற்றும் பல ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை வழங்கும் என்று சாம்சங் கூறுகிறது. இந்த போன் EAL5+ சான்றிதழைப் பெற்ற சாம்சங் நாக்ஸ் வால்ட் செக்யுரிட்டி அமைப்பையும் கொண்டுள்ளது. இந்த போன் Now Bar, Live Notifications, Large Folders, Google Gemini AI ஒருங்கிணைப்பு மற்றும் Circle to Search அம்சம் உள்ளிட்ட பல ஸ்மார்ட் அம்சங்களையும் வழங்குகிறது.
இதையும் படிங்க :நாள் குருசாச்சு Oppo Find N6 அறிமுகம் இந்த தேதியில் வரும், பல அம்சம் தகவல் லீக் தெருஞ்சிகொங்க
கேமரா எடுப்பதற்கு, Galaxy M17e 5G ஸ்மார்ட்போனில் 50MP ப்ரைமரி கேமராவும், 2MP ஆழ சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , இந்த ஸ்மார்ட்போனில் 8MP முன்பக்க கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது நீண்ட மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங், உலாவுதல் மற்றும் சமூக ஊடக பயன்பாட்டிற்கு போதுமான பக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.