Samsung Galaxy M13 சீரிஸ் 11,999,ரூபாயின் ஆரம்ப விலையில் அறிமுகம்.

Updated on 14-Jul-2022
HIGHLIGHTS

Samsung Galaxy M13 அறிமுகம்

6 ஜிபி வரை ரேம் பொருத்தப்பட்டுள்ளது

ஆட்டோ டேட்டா மாறுதல் அம்சத்துடன் பொருத்தப்பட்டுள்ளது

சாம்சங் புதிய சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் Galaxy M13 தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் Galaxy M13 5G மற்றும் Galaxy M13 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 6 ஜிபி வரையிலான ரேம், 11 5ஜி பேண்டுகள், இந்த செக்மென்ட்டின் முதல் ஆட்டோ டேட்டா ஸ்விட்சிங் வசதி, 6000எம்ஏஎச், 50எம்பி கேமரா போன்ற அம்சங்கள் அடங்கிய பல சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விலை 11,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. எனவே Galaxy M13 தொடரின் விலை என்ன, அது எப்போது கிடைக்கும் மற்றும் அதன் அம்சங்கள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

Samsung Galaxy M13 விலை தகவல்.

M13 4ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 எனவும், அதன் 6ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.12 ஆயிரத்து 999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் M13 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14 ஆயிரத்து 999 என்றும் அதன் 6ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.15 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போன் வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.

Samsung Galaxy M13 சிறப்பம்சம்.

M13 4ஜி ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வந்துள்ளது. அதேபோல் M13 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வந்துள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் மிட்நைட் ப்ளூ, ஆக்வா கிரீன் மற்றும் ஸ்டார்டஸ்ட் பிரவுன் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

M13 5ஜி ஸ்மார்ட்போனில் ரேம் ப்ளஸ் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் உடன் வந்துள்ளது. டைமென்சிட்டி 700 புராசஸரை கொண்டுள்ளது. அதேபோல் M13 4ஜி ஸ்மார்ட்போன் 4,000 எம்.ஏ.ஹெச் பேட்டரியை கொண்டு உள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :