Samsung Galaxy M16 5G and M06 5G with upto 6 yrs updates launched in India starting just rs 9499
Samsung இறுதியாக அதன் புதிய M சீரிஸ் போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது, இந்த சீரிஸின் கீழ் Galaxy M06 5G மற்றும் Galaxy M16 5G போன் அறிமுகம் செய்தது, Galaxy M16 5G மற்றும் Galaxy M06 5G போன் புதிய கலர் விருப்பத்தில் வருகிறது, அப்டேட் செய்யப்பட்ட் புதுப்பித்த வடிவமைப்புகள், நுழைவு-நிலை ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானவை. இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசானில் கிடைக்கும். இந்த இரு போனில் இருக்கும் அம்சம் மற்றும் விலை தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க
கேலக்ஸி M06 5G யின் அடிப்படை வேரியன்டான 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் விலை ரூ.9,499 இல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 7, மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். கஸ்டமர்கள் Sage Green மற்றும் Blazing Black ஆகியவற்றிலிருந்து தேர்வு செய்யலாம்.
கேலக்ஸி M16 5G யின் அடிப்படை வேரியன்ட் 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையுடன் கூடிய அடிப்படை டிரிம் விலை ரூ.11,499 யில் தொடங்குகிறது. இந்த போன் மார்ச் 5, மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட்போன் ப்ளஷ் பிங்க், மிண்ட் கிரீன் மற்றும் தண்டர் பிளாக் க்கலர்களில் வாங்கலாம் கிடைக்கிறது. மேலும் நீங்கள் இதில் பேங்க் ஆபருடன் அறிமுக சலுகையும் பெற முடியும்.
Galaxy M06 5G 6.7-இன்ச் HD+ LCD பேனல் பேனல் மற்றும் 90 Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது. இது 800 nits ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது. இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது Android 15 அடிப்படையிலான One UI 7 யில் இயங்குகிறது
கேமராவைப் பொறுத்தவரை, Galaxy M06 5G ஆனது 50MP பிரைமரி ஷூட்டர் மற்றும் 2MP டெப்த் சென்சார் உடன் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8MP முன்பக்க கேமராவுடன் வருகிறது.
இப்பொழுது பேட்டரியை பற்றி பேசினால், 5,000 mAh பேட்டரி மற்றும் 25W சார்ஜிங்கைக் கொண்டுள்ளது. இந்த போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சாரையும் வழங்குகிறது. நிறுவனம் 4 ஆண்டுகளுக்கு OS அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு கனேக்சன்களை உறுதியளித்துள்ளது.
Galaxy M16 5G ஆனது 90Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.7-இன்ச் முழு HD+ AMOLED பேனலைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் அதே MediaTek Dimensity 6300 செயலியைப் பயன்படுத்துகிறது மற்றும் One UI 7 ஸ்கின்னில் இயங்குகிறது. நிறுவனம் ஆறு வருட OS மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை உறுதியளிக்கிறது. இது 25W சார்ஜிங் திறன் கொண்ட 5,000mAh பேட்டரியையும் உள்ளடக்கியது.
இந்த சாதனம் 50 MP பிரைமரி ஷூட்டர், 5 MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2 MP டெப்த் சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா செட்டிங் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இந்த சாதனம் 13 MP முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது. இதில் 5G இணைப்பு, டூயல்-பேண்ட் வைஃபை ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரைக் கொண்டுள்ளது மற்றும் IP54 மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க Samsung யின் இந்த போனில் ஒன்றல்ல, இரண்டல்ல ஒரே அடியாக ரூ,19,000 டிஸ்கவுண்ட்