இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகும் SAMSUNG GALAXY FOLDABLE ஸ்மார்ட்போன்.

Updated on 18-Apr-2019
HIGHLIGHTS

Samsung India அடுத்த மாதம் கேலக்சி போல்ட் அறிமுகமாகும்

ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், மூன்று பிரைமரி கேமராக்கள், இரண்டு செல்ஃபி கேமராக்கள் மற்றும் முன்புற கவர் டிஸ்ப்ளேவில் 10 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஃபோல்டு மாடலை இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் துவங்கியது. Samsung மே மாதத்தில் அதன் போல்டப்பில் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் ‘Galaxy Fold’ இந்தியாவில் அறிமுகம் செய்யும். அறிக்கையின்படி Samsung India அடுத்த மாதம் கேலக்சி போல்ட் அறிமுகமாகும், ஆனால்  அறிமுக தேதி பற்றிய  தகவல்  வெளியாகவில்லை.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் QXGA பிளஸ் டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில், சுமார் 7.3 இன்ச் அளவிலும், மடிக்கக்கப்பட்ட நிலையில், 4.6 இன்ச் அளவில் பயன்படுத்தலாம்.

இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், மூன்று பிரைமரி கேமராக்கள், இரண்டு செல்ஃபி கேமராக்கள் மற்றும் முன்புற கவர் டிஸ்ப்ளேவில் 10 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் 4380 Mah. பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

SAMSUNG GALAXY FOLD சிறப்பம்சங்கள்:

– 7.3 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே
– 4.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 12 ஜி.பி. ரேம்
– 512 ஜி.பி. மெமரி
– 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், AF, OIS, f/1.5 – f/2.4
– 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 80° வைடு ஆங்கிள் லென்ஸ், f/1.9
– 8 எம்.பி. இரண்டாவது டெப்த் கேமரா, f/2.2
– 10 எம்.பி. கவர் கேமரா, f/2.2 
– AKG டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் 
– 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி (இரு பேட்டரிகள்)
– 5ஜி சப்6/எம்.எம். வேவ், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– வயர்லெஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் சில்வர், காஸ்மோஸ் பிளாக், மார்ஷியன் கிரீன் மற்றும் ஆஸ்ட்ரோ புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

விலை  தகவல் 
இதன் விலை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,40,760) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மே 7 ஆம் தேதி அறிமுகமாகும் என இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :