சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு வருகிற செப்டம்பர் 29 ஆம் தேதி நடக்கும் என்று தென்கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் (செப்.23) அன்று உறுதி செய்தது.
Survey
✅ Thank you for completing the survey!
வெளியீட்டு தேதியுடன் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களும் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், மூன்று கேமரா சென்சார்கள், சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யூல் கொண்டிருக்கிறது.
குறிப்பிடத்தக்க வண்ணம், சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் தான் கேலக்ஸி எஃப்-சீரிஸின் கீழ் அறிமுகமாகும் முதல் 5ஜி போன் ஆகும் மற்றும் 2021-இல் இருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாவது எஃப்-சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும்.
சாம்சங் கேலக்ஸி F42 5G மாடல் வருகிற செப்டம்பர் 29 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும் என்று சாம்சங்கின் பிரத்யேக மைக்ரோசைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் வலைத்தளம், பிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக வாங்க கிடைக்கும்.
மைக்ரோசைட்டில் உள்ள படங்களின்படி, கேலக்ஸி எஃப் 42 5ஜி தற்போது கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile