5,000mAh பேட்டரியுடன் புதிய Samsung போன் அறிமுகம் இதுல புதுசா என்ன விஷயம் இருக்கு?

Updated on 11-Sep-2025
HIGHLIGHTS

Samsung அதன் புதிய Samsung Galaxy F17 5G போனை அறிமுகம் செய்துள்ள

இந்த போனில் பல AI அம்சங்கள் உடன் மிக சிறப்பாக இருக்கிறது

Samsung Galaxy F17 5G போனின் ஆரம்ப விலை ரூ,14,499 ஆகும்

Samsung அதன் புதிய Samsung Galaxy F17 5G போனை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த போனில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன் மற்றும் 5,000mAh பேட்டரியுடன் போன்ற பல அம்சம் கொண்டுள்ளது இதை தவிர இந்த போனில் பல AI அம்சங்கள் உடன் மிக சிறப்பாக இருக்கிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy F17 5G விலை தகவல்

Samsung Galaxy F17 5G போனின் விலையை பத்தி பேசுனா 4GB + 128GB ரேம் ஸ்டோரேஜ் யின் விலையை ரூ,14,499 மற்றும் 6GB + 128GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,15,999 ஆகும் மேலும் இந்த போனை Neo Black மற்றும் Violet Pop கலரில் வாங்கலாம் மேலும் இதை samsung india மற்றும் ப்ளிப்கார்டிலிருந்து வாங்கலாம்.

Samsung Galaxy F17 5G சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே:-Samsung Galaxy F17 5G ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் full-HD+ (1,080×2,340 பிக்சல்கள்) Infinity-U Super AMOLED டிஸ்ப்ளேவுடன் 90Hz ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது. இந்த ஸ்க்ரீனில் Corning Gorilla Glass Victus ப்ரொடெக்ஷன் உள்ளது.

ப்ரோசெசர்:-இந்த ஸ்மார்ட்போன் 5nm Exynos 1330 SoC உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 6GB வரை RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Apple iPhone 17 Pro Max, iPhone 17 Pro மற்றும் iPhone 17 வேற லெவல் அம்சங்களுடன் அறிமுகம்

ஒப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் AI அம்சம்:-Galaxy F17 5G ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 7 யில் இயங்குகிறது. இது ஆறு ஆண்டுகளுக்கு முக்கிய OS அப்டேட் ஆறு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி ப்ரொடெக்ஷன் வழங்குகிறது. இந்த போனில் கூகிளின் ஜெமினி மற்றும் சர்க்கிள் டு சர்ச் போன்ற AI அம்சங்கள் இருக்கிறது . இது Samsung Wallet உடன் Samsung இன் Tap & Pay அம்சத்தையும் சப்போர்ட் செய்கிறது .

கேமரா :-கேமரா பற்றி பேசுகையில் Samsung Galaxy F17 5G ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார், 5-மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் மற்றும் பின்புறத்தில் 2-மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , இது முன்புறத்தில் 13-மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

பேட்டரி :-Samsung Galaxy F17 5G, 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி:-இது 5G, 4G VoLTE, Wi-Fi 5, ப்ளூடூத் 5.3, GPS, NFC, OTG மற்றும் USB Type-C இணைப்பையும் ஆதரிக்கிறது. பாதுகாப்பிற்காக, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது. டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ஊடுருவலுக்கு ரெசிச்டன்ட் பாதுகாப்பிற்காக, கைபேசி IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இது 164.4×77.9×7.5mm சைஸ் மற்றும் 192g எடை கொண்டுள்ளது .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :