Samsung Galaxy F06 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நிறுவனம் இந்த போனை பிப்ரவரி 12 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இது சாம்சங்கின் மற்றொரு பட்ஜெட் போனாக இருக்கும், இதன் விலை ரூ.9000 முதல் 9,999 வரை இருக்கலாம். நிறுவனம் விலையை வெளியிடவில்லை, பிளிப்கார்டின் மைக்ரோ சைட் மூலம் இது 10,000ரூபாய்க்கும் குறைவாக தான் இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த போன் பிளிப்கார்ட்டில் வாங்குவதற்குக் கிடைக்கும். அதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் இந்திய தேதி மற்றும் நேரங்களை பற்றி பார்க்கலாம்.
நிறுவனம் Samsung Galaxy F06 5G- யின் விலையை அறிவித்து உள்ளது . ரூ.9,xxx விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதாவது இந்த போனின் விலை 9000ரூபாய் தாண்டாது என ஆகும். இதற்கான மைக்ரோசைட்டும் பிளிப்கார்ட்டில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது . இந்திய நேரப்படி இது இரவு 8:30 மணிக்கு இந்த போன் அறிமுகப்படுத்தப்படும். நிறுவனம் இதை பஹாமா ப்ளூ மற்றும் லிட் வயலட் உள்ளிட்ட இரண்டு கலர் வகைகளில் அறிமுகப்படுத்தும்.
Samsung Galaxy F06 5G 6.8 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 800 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. இந்த போனில் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. நாட்ச்சில் ஒரு செல்ஃபி கேமரா உள்ளது. இந்த போனில் பெரிய பெசல்கள் உள்ளது. இந்த போன் Dimensity 6300 ப்ரோசெசருடன் வரப்போகிறது. இதனுடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கும்.
Samsung Galaxy F06 5G 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமராவைக் கொண்டுள்ளது. இதனுடன், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் இங்கே கிடைக்கிறது. செல்ஃபிக்காக, இந்த போனில் 8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பயனர் நான்கு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு சாப்ட்வேர் அப்டேட்களை பெறுவார் என்றும், அதே காலத்திற்கு செக்யூரிட்டி அப்தேட்களுக்கு கிடைக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
Galaxy F06 5G 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனுடன், 25W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உள்ளது. ஆனால் போனுடன் சார்ஜர் வழங்கப்படாது, கஸ்டமர் அதை தானே வாங்க வேண்டும். இது தவிர, செக்யுரிட்டிக்காக போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Poco யின் இந்த புதிய போனில் அதிரடியாக ரூ,3000 குறைப்பு