Samsung யின் 8 மற்றும்ஜூன் 9 யில் நடைபெறும் இந்திய நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது.இதனுடன் இந்த நிகழ்வில் நிறுவனம் அதன் Samsung Galaxy A80 மொபைல் போனை அறிமுகம் செய்ய உள்ளது இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனை ஏப்ரல் மாதமே தாய்லேண்டில் அறிமுகம் செய்யப்பட்டது இதனுடன் நிறுவனம் முதல் முறையாக இந்த மொபைல் போனை பாப்-அப் ரொடேடிங் கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் Galaxy A 80 சிறப்பம்சம்.
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஸ்லைட் அவுட் கேமரா சாம்சங்கின் H -to -H டிஸ்பிளே போன்றவை இதில் வழங்குகிறது.இதனுடன் இதில் முழு டிஸ்பிளே அதாவது பேசில் இல்லாத டிஸ்பிலேவை வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் டிஸ்பிளே ஒரு 6.7 இன்ச் இருக்கிறது மேலும் இதன் ரெஸலுசன் 1080×2400 பிக்சல் இருக்கிறது.இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 20:1 இருக்கிறது
இக்கருவி ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் உடன் அட்ரினோ 618ஜிபியு அடங்கிய சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இதன் கேமராவை பற்றி பேசினால், கேலக்ஸி A 80 ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.
கேலக்ஸி A 80 சாதனத்தில் 3700MaH பேட்டரி மற்றும் 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு போன்ற பல சப்போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது