Samsung Galaxy A71 இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் ஸ்மார்ட்போன் முந்தைய கேலக்ஸி ஏ 70 ஐ இடத்தி பிடிக்கிறது . இந்த புதிய சாம்சங் போன் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் போனின் பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ 71 அண்ட்ராய்டு 10 உட்பட ஒன் யுஐ இல் இயங்குகிறது. வியட்நாமில், இந்த தொலைபேசி இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இந்தியாவில் இது ஒற்றை மாறுபாட்டில் மட்டுமே வந்துள்ளது. சாம்சங்கின் புதிய போன்களில் ஒப்பீடுகளில் Vivo V17 Pro, Oppo Reno, Redmi K20 Pro, மற்றும் OnePlus 7 போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ 71 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இதன் விலை ரூ .29,999. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிஸம் க்ரஷ் பிளாக், ப்ரிஸம் க்ரஷ் சில்வர் மற்றும் பிரிசம் க்ரஷ் ப்ளூ கலரில் வருகிறது, இதன் விற்பனை பிப்ரவரி 24 ஆம் தேதி சாம்சங் ஓபரா ஹவுஸ் சாம்சங்.காம் மற்றும் பெரிய ஆன்லைன் போர்ட்டலில் தொடங்கும்.
சாம்சங் கேலக்ஸி A71 6.7 இன்ச் ஃபுல் எச்டி + டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே மற்றும் 20: 9 என்ற ரேஷியோ கொண்டுள்ளது. இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஆக்டா கோர் SoC ஆல் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் 128 ஜிபி சேமிப்பு உள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு உதவியுடன் 512 ஜிபி ஆக அதிகரிக்க முடியும்.
கேமரா பற்றி பேசினால் இந்த போனில் நான்கு கேமராக்கள் கொட்டுக்கப்பட்டுள்ளது.அதில் 64மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் இதில் f/1.8 அப்ரட்ஜர் கொண்டுள்ளது, இரண்டாவது 12 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா f/2.2 அப்ரட்ஜர் உடன் வைட் என்கில் லென்ஸ் கொண்டுள்ளது.இதை தவிர மற்ற இரண்டு கேமராக்களும் 5 மெகாபிசல் கொண்டுள்ளது அது டெப்த் மற்றும் மைக்ரோ ஷாட்ஸ் எடுக்க உதவும் அதன் அப்ரட்ஜர் f/2.2 மற்றும் f/2.4 இருக்கிறது. மேலும் இதன் முன் பக்கத்தில் 32 மெகாபிக்ஸல் பிரண்ட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது அதன் அப்ரட்ஜர் /2.2 இருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கு இந்த போனில் 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத் , GPS/ A-GPS மற்றும் USB Type-C போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த சாதனத்தில் 4,500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது 25W பாஸ்ட் சார்ஜின்க சப்போர்ட் செய்கிறது.