சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A50S மற்றும் கேலக்ஸி A70S ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ. 3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிய சலுகையின் படி கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 3000 உடனடி கேஷ்பேக், கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ. 2000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி தற்சமயம் ஆஃப்லைன் சந்தையில் மட்டும் வழங்கப்படுகிறது. இதுவும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தள்ளுபடியை தொடர்ந்து கேலக்ஸி ஏ50எஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. பிளாக் மற்றும் வைலட் நிற மாடல் ரூ. 19,999 விலையில் கிடைக்கிறது. மற்ற மாடல்கள் ரூ. 20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஏ50எஸ் வைட் நிற எடிஷன் ரூ. 2000 விலை குறைக்கப்பட்டு 4 ஜி.பி. மாடல் ரூ. 18,999, 6 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் ரூ. 25,999, 8 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிசம் ரெட், ப்ரிசம் கிரஷ் பிளாக் மற்றும் ப்ரிசம் கிரஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது.