Samsung Galaxy A35 ஸ்மார்ட்போன் Geekbench யில் லீக் 6GB ரேம் கொண்டிருக்கு

HIGHLIGHTS

Samsung தனது A சீரிஸில் புதிய சாம்சங் கேலக்ஸி A35 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யலாம்

Samsung Galaxy A35 பெஞ்ச்மார்க் பிளாட்பாரம் ஆன (Geekbench) யில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது,

இது கீக்பெஞ்சில் SM-A356U மாடல் நம்பருடன் தோன்றியது

Samsung தனது A சீரிஸில் புதிய சாம்சங் கேலக்ஸி A35 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யலாம் போனின் லீக் வரத் தொடங்கியுள்ளன, அது இப்போது பெஞ்ச்மார்க் பிளாட்ஃபார்மிலும் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது நிறுவனம் Samsung Galaxy A35 யில் ஏதாவது சிறப்பு வழங்க முடியும். சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் இன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களில், AI போன்ற அதி நவீன அம்சங்களுடன் கூடிய போனை அறிமுகப்படுத்தும் பாதையை நிறுவனம் எடுக்க முடியும். இப்போதைக்கு, Samsung Galaxy A35 பற்றி என்ன அப்டேட் வெளிவருகிறது என்பதை பற்றி பார்க்கலாம்

Samsung Galaxy A35 லீக் தகவல்

Samsung Galaxy A35 பெஞ்ச்மார்க் பிளாட்பாரம் ஆன (Geekbench) யில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த போன் அறிமுகப்படுத்தப்படலாம். இது கீக்பெஞ்சில் SM-A356U மாடல் நம்பருடன் தோன்றியது. இங்கே லிஸ்ட்டில் இந்த போனை பற்றிய சில முக்கியமான தகவல்கள் உள்ளன. அதன் மதர்போர்டின் கோடில் பெயர் s5e8835. போனில் உள்ள ஆக்டாகோர் ப்ரோசெசர் விவரங்கள் இங்கே தெரியும். சிப்பில் 4 கோர்கள் 2GHz வேகத்தில் உள்ளன, மற்ற 4 கோர்கள் 2.40GHz ஸ்பீடில் உள்ளன. எக்ஸினோஸ் 1380 சிப்செட்டை போனில் காணலாம் என்பதை இது காட்டுகிறது. இந்த ப்ரோசெசர் Galaxy A54 மற்றும் Galaxy M54 ஆகியவற்றிலும் காணப்படுகிறது.

Credit: MySmartPrice

Samsung Galaxy A35 யின் சிறப்பம்சம் பற்றி பேசினால், கண்பிக்ரெட் ரேம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த போனில் 6 ஜிபி ரேம் உடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது நிறுவனம் RAM யில் மற்ற விருப்பங்களையும் இங்கே வழங்க முடியும். இந்த போன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 உடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் பெஞ்ச்மார்க் மதிப்பெண்களைப் பற்றி பேசுகையில், இது சிங்கிள் கோரில் 697 புள்ளிகளை எட்டியுள்ளது, அதே நேரத்தில் மல்டி கோர்களில் 2,332 புள்ளிகளை எட்டியுள்ளது.

இதையும் படிங்க ஜனவரி 31 முதல் KYC செய்யப்படாத FASTags மூடப்படும் இதை எப்படி அப்டேட் செய்வது ?

இந்த போனை பற்றி வந்த மற்றொரு ரிப்போர்டில் ரெண்டர்கள்லீக் பற்றி கூறப்பட்டது, இதன்படி, சாம்சங் கேலக்ஸி ஏ35 ஐஸ் ப்ளூ, லிலாக் மற்றும் நேவி ஆகிய மூன்று கலரில் அறிமுகப்படுத்தப்படலாம்.

போனின் வலது பக்கத்தில் ஒரு ஐலேன்ட் பம்ப் இருப்பதாகக் கூறப்படுகிறது, இது பவர் மற்றும் வால்யூம் பட்டன்களை கொண்டிருக்கலாம். ஃபோனில் ரிங் கோர்னர் மற்றும் பிளாஸ்டிக் பிரேம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy A35 இன் பின்புறத்தில் LED ஃபிளாஷ் கொண்ட வெர்டிக்கள் டிரிபிள்-கேமரா செட்டிங் காணலாம். ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா இருக்கலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :