Samsung Galaxy A10S ஸ்மார்ட்போன் 4000Mah பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Updated on 13-Aug-2019

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A10S ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. . புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச்HD . பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இ.ங்குதளம் மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy A10S சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் எக்சைனோஸ் பிராசஸர்
– 2 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– 4,000 Mah . பேட்டரி

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ10எஸ் ஃபேஸ் அன்லாக் வசதியும் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் புளு, கிரீன், ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :