Samsung Galaxy A10S 4000Mah பேட்டரி உடன் பட்ஜெட் விலையில்அறிமுகம்.

Updated on 28-Aug-2019

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி A10S சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் எக்சைனோஸ் பிராசஸர்
– 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– 4,000 Mah .பேட்டரி

புதி்ய கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி A10S  ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ SD  ஸ்லாட் மற்றும் 4000 Mah . பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை 
சாம்சங் கேலக்ஸிA10 S ஸ்மார்ட்போன் புளு, கிரீன், ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,499 என்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :