ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் போஸ்டர் படம் இன்டர்நெட்டில் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் படத்தில் ரெட்மி X என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே பிங்காரப்ரின்ட் சென்சார் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் பற்றிய மற்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. புதிய ரெட்மி X ஸ்மார்ட்போன் பிளேஃபுல்டிராய்டு மூலம் இன்டர்நெட்டில் வெளியாகியுள்ளது. அதன்படி ரெட்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் அல்லது மிட்-ரேன்ஜ் சந்தையை குறிவைக்கும் என கூறப்படுகிறது.
வரும் மாதங்களில் சியோமி குழுமம் சார்பில் ரெட்மி 7, ரெட்மி 7 ப்ரோ, ரெட்மி எக்ஸ் மற்றும் சியோமியின் Mi 9 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய விளம்பர படத்துடன் வெளியாகியிருக்கும் மற்றொரு டீசரிஸ் Mi 9 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரெட்மி பிராண்டு ஏற்கனவே ரெட்மி 7 மற்றும் ரெட்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதால், புதிய ரெட்மி X ஸ்மார்ட்போன் இவற்றை விட அப்டேட் சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிய ரெட்மி X ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் மற்றும் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் விளம்பர படங்கள் சியோமி அல்லது ரெட்மி தரப்பில் இருந்து கசிந்ததாக தெரியவில்லை. மேலும் விளம்பர படத்தில் புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை இதுபோன்ற தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.