சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுவரை இந்த சீரிஸ் பற்றி பல்வேறு விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த வகையில் ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நவம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 9 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
– 6.53 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
– மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர்
– 48 எம்பி பிரைமரி கேமரா
– டெப்த் சென்சார்
– மேக்ரோ சென்சார்
– கைரேகை சென்சார்
– 5ஜி, ப்ளூடூத், வைபை
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
முதற்கட்டமாக புதிய ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகமாகி அதன்பின் சர்வதேச சந்தையில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.