ஸ்பெஷாலான மக்களுக்காக Redmi Note 15 Special Edition அறிமுகம் மதி மயங்கும் அழகுடன் அசத்தும் டிசைன்

HIGHLIGHTS

Xiaomi இன்று இந்தியாவில் அதன் Redmi Note 15 Special Editionஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது

இந்த ஸ்மார்ட்போன் ஸ்லீக் டிசைன் , பிரமிக்க வைக்கும் டிஸ்ப்ளே மற்றும் ஸ்மார்ட் அம்சங்களை ஒருங்கிணைக்கிறது

மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களின் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

Xiaomi இன்று இந்தியாவில் அதன் Redmi Note 15 Special Editionஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் ஸ்லீக் டிசைன் , பிரமிக்க வைக்கும் டிஸ்ப்ளே மற்றும் ஸ்மார்ட் அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. இது பயனர்களின் மித சிறந்த கிரியேஷன் மற்றும் கனெக்ஷன் வசதிகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களின் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

Redmi Note 15 Special Edition விலை தகவல்.

Redmi Note 15 SE விலை பற்றி பேசினால் , இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வழங்கும் அடிப்படை வேரியண்ட்டிற்கு ரூ. 24,999-இல் தொடங்குகிறது. அதே சமயம், உயர் ரக 8ஜிபி + 128ஜிபி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 25,999 ஆகும். இறுதியாக, 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-ஆஃப்-லைன் மாடலின் விலை ரூ. 27,999 ஆகும். இருப்பினும், சியோமியின் இந்த துணை பிராண்ட், ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு ரூ. 2,000 சலுகையை வழங்குகிறது. மேலும், இந்நிறுவனம் ரூ. 4,000 “சிறப்பு” அறிமுக தள்ளுபடியையும் வழங்குகிறது.

இந்தப் புதிய போன், ஏப்ரல் 7 அன்று இந்தியாவில் ஃபிளிப்கார்ட் மற்றும் சியோமி ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும். ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி, கார்பன் பிளாக், கிரிம்சன் ரிசர்வ் (சிவப்பு) மற்றும் ஃப்ராஸ்டட் ஒயிட் ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

Redmi Note 15 Special Edition சிறப்பம்சம்.

Redmi Note 15 Special Editio 5G சியோமியின் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2-வில் இயங்கும் ஒரு டூயல் சிம் போநகும் . இந்தக் போனில் 6.77-இன்ச் (1,080×2,392 பிக்சல்கள்) கர்வ்ட் AMOLED ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது. இது 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 3,200 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் மற்றும் DCI-P3 கலர் ரேன்ஜ் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும், இது TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட், சர்க்கேடியன் ஃப்ரெண்ட்லி மற்றும் ஃப்ளிக்கர் ஃப்ரீ சர்டிபிகேஷன் பெற்றுள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டண்டிர்க்காக IP65 + IP66 டேட்டின்குடன் இந்த போன் வருவதாக அந்நிறுவனம் கூறுகிறது.

புதிய ரெட்மி நோட் 15 SE 5G, குவால்காமின் 4nm ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 2.4GHz உச்சபட்ச கிளாக் வேகத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ GPU, 8GB வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை அதிகரிக்க முடியும். செக்யூரிட்டிக்காக , இதில் ஸ்க்ரீனுக்கு அடியில் உள்ள பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் AI ஃபேஸ் அன்லாக் வசதிகளும் உள்ளன.

இதையும் படிங்க வேற லெவல் பட்டய கிளப்பும் ஆபர் Vivo யின் இந்த புது மாடல் போனுக்கு அதிரடியாக ரூ,11,500 வரை டிஸ்கவுண்ட்

கேமராக்களைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 15 SE 5G ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 1/2.88-அங்குல லைட் ஹண்டர் 400 சென்சார் கொண்ட 50-மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமரா முன்னணியில் உள்ளது. இந்த போனில் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சாரும் உள்ளது. முன்புறத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 1/4-இன்ச் சென்சார் கொண்ட 20-மெகாபிக்சல் (f/2.2) கேமரா ரெட்மி நோட் 15 SE 5G-யில் இடம்பெற்றுள்ளது. இது 4K/30 fps வரை வீடியோக்களைப் ரெக்கார்டிங் செய்யும் பவர் கொண்டுள்ளது .

ரெட்மி நோட் 15 SE 5G, 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், இது கனெக்ஷன் வசதிகளுக்காக 5G, 4G LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஒரு USB டைப்-C போர்ட், GPS, GLONASS, BDS மற்றும் கலிலியோ ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த ஃபோனின் டைமென்ஷன் 164×75.42×7.35mm மற்றும் இதன் எடை சுமார் 178g ஆகும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :