ரெட்மி இந்தியாவின் புதிய ஃபோன் ரெட்மி 11 பிரைம் 5ஜி அடுத்த வாரம் செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது, மேலும் இதனுடன் ரெட்மி ஏ1வும் அறிமுகப்படுத்தப்படும். Redmi A1 பற்றி கூறப்படுவது, இது ஒரு சுத்தமான ஆண்ட்ராய்டு போனாக இருக்கும், இது குறைந்த விலையில் சிறந்த போனை தேடுபவர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படும். Redmi A1 இன் மைக்ரோசைட் நிறுவனத்தின் இணையதளத்திலும் நேரலையில் உள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
இத்துடன் மீடியாடெக் பிராசஸர், கிளீன் ஆண்ட்ராய்டு அனுபவம் வழங்கும் என ரெட்மி தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போன் MIUI-க்கு மாற்றாக ஸ்டாக் ஆண்ட்ராய்டு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், ஏஐ கேமரா அம்சங்களுடன் வெளியாகிறது.
புதிய ரெட்மி A1 ஸ்மார்ட்போன் லெதர் போன்ற டெக்ஸ்ச்சர் கொண்ட பேக் பேனல் கொண்டிருக்கும் என ரெட்மி வெளியிட்டு இருக்கும் டீசரில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன், புளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் அறிமுகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. இதன் டிஸ்ப்ளேவில் நாட்ச் இடம்பெற்று இருக்கிறது.
புது ரெட்மி A1 எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் இதன் விலை 2019 வாக்கில் ரூ. 4 ஆயிரத்து 499 விலையில் அறிமுகமான ரெட்மி கோ ஸ்மார்ட்போனை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படாது என்றே தெரிகிறது. ரெட்மி A1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile