6000mAh பேட்டரி கொண்ட Redmi 9 Power அமேசானில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Updated on 29-Dec-2020
HIGHLIGHTS

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது

இன்று அமேசானில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. . இன்று அமேசானில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது 

விலை மற்றும் விற்பனை தகவல்.

புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் மைட்டி பிளாக், பியெரி ரெட், எலெக்ட்ரிக் கிரீன் மற்றும் பிளேசிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.Xiaomi Redmi 9 Power இன்று பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது மேலும் பல ஆபர் தகவலை பற்றி தெரிந்து கொள்ள அமேசான் அதிகாரபூர்வ தளத்தை காணலாம்.

Redmi 9 Power  சிறப்பம்சம்.

புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அட்ரினோ 610 GPU வழங்கப்பட்டு இருக்கிறது

இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. 

டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 யுஐ கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 6000 mAh பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் 3.5mm ஆடியோஜாக், எப்எம் ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்,  ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating), டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5,  யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :