Xiaomi நிறுவனம் இந்தியாவில் அதன் Redmi 7 ஸ்மார்ட்போன் மற்றும் Redmi Y3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது மேலும் இந்த ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நிறுவனம் வாரத்திற்கு ஒரு மறை மட்டுமே விற்பனை செய்து வந்தது, ஆனால் மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்று தற்பொழுது அமேசானில் எப்பொழுது வேணுமானாலும் வாங்கி செல்லலாம் என அறிவித்துள்ளது.
REDMI 7 விலை மற்றும் ஆபர்
Redmi 7 யின் 2GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை 7,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 3GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 8,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.இதனுடன் மேலும் இந்த சாதனத்தில் அறிமுக சலுகையாக பயனர்களுக்கு வழங்குகிறது டபுள் டேட்டா பிளான் அதாவது Rs 2400 கேஷ்பேக் வழங்குகிறது, இதனுடன் இதில் நோ கோஸ்ட் EMI வசதியும் வழங்கப்படுகிறது.
REDMI 7 சிறப்பம்சம் Redmi 7 ஸ்மார்ட்போனினை நிறுவனம் ஓரா ஸ்மோக் டிசைன் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.மற்றும் இந்த ஸ்மார்ட்போனை மூன்று கலர் லூனார் ரெட், காமத் ப்ளூ மற்றும் எக்லிப்ஸ் பிளாக் என்ற கலர் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த சாதனத்தில் 6.26 இன்ச் வாட்டர் ட்ராப் நோட்ச் டிஸ்பிளே மற்றும் அதில் 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது. மற்றும் இதில் HD+ LCD IPS டிஸ்பிளே கொண்டுள்ளது இதனுடன் இதில் HD+ LCD IPS டிஸ்பிளே இதனுடன் இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 5 ப்ரொடெக்சன் போன்றவை வழங்குகிறது.
Redmi 7 இந்த போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 632 மற்றும் 4000mAh பேட்டரி உடன் கொண்டு வந்துள்ளது. மேலும் இதில் 2 நாட்கள் வரையிலான பேட்டரி லைப் வழங்குகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 2+1 ஸ்லோட் கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் மைக்ரோ SD கார்ட் வழியாக 512GB வரை அதிகரிக்கலாம், மற்றும் இதனுடன் இதில் 3.5 mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.