Realme X3 Pro தகவல் இன்டர்நெட்டில் லீக்

Updated on 10-Aug-2020
HIGHLIGHTS

Realme பிராண்டு எக்ஸ்3 ப்ரோ மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Realme எக்ஸ்3 மற்றும் எக்ஸ்3 ஜூம் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி பிராண்டு எக்ஸ்3 ப்ரோ மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
RMX2083 மாடல் நம்பர் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி உள்ளது. புதிய எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதே சிப்செட் ரியல்மி எக்ஸ்3 மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. முன்னதாக இதே அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் டியுவி ரெயின்லாந்தில் லீக் ஆகி இருந்தது. அங்கு இந்த மாடல் RMX2170 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்து.

முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை செல் கொண்ட 4200 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. எனினும், இதுபற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.  ரியல்மி எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் டூயல் செல் பேட்டரி, 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :