REALME தொடர்ந்து சந்தையில் முதல் இடத்தை பிடிக்க இங்கு பல முயற்சி எடுத்து வருகிறது அந்த வகையில் ஒப்போவின் ரியல்மி பிராண்டு இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களும் TENAA வலைதளத்தில் RMX1851 மற்றும் RMX1901 மாடல் நம்பர்களை கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒன்று ரியல்மி 3 ப்ரோ என அழைக்கப்படலாம். பெயருக்கு ஏற்றார்போல் இது ரியல்மியின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இதில் பாப் அப் முன் பேசிங் கேமரா மற்றும் மற்றும் பெஜில் லெஸ் டிஸ்பிலே உடன் வழங்கப்படுகிறது.
புதிய ரியல்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படலாம். இதே பிராசஸர் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ், சியோமி Mi 9 மற்றும் இதர டாப் எண்ட் ஸ்மார்ட்பன்களில் வழங்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.
சீனாவில் ரியல்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலை RMB 2999 (இந்திய மதிப்பில் ரூ.31,100) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ஸ்டோரேஜ் உள்ளிட்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ரியல்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் போட்டோ எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, மற்றும் இரண்டாவது பிரைமரி கேமரா ஒன்றும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே பிங்கர் ப்ரிண்ட் சென்சார், பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர இருக்கும் இந்த போன் ஒரு ப்ளாக்ஷிப் சாதனமாக இருக்கும். இதனுடன் இதன் பின் புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உடன் வருகிறது. மற்றும் இந்த போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்ஸல் கேமரா வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் 3680mAh பேட்டரி VOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் மற்றும் இது ஆண்ட்ராய்டு 9 பையில் வேலை செய்கிறது.இதனுடன் இது ColorOS 6 யில் வேலை செய்கிறது.