Realme P4 சீரிஸ் 7000Mah பவர்புல் பேட்டரியுடன் அறிமுகம் மேலும் இதன் வேறலேவல் அம்சம் விலை எல்லாமே பாருங்க

Updated on 20-Aug-2025

Realme இன்று அதன் Realme P4 மற்றும் அதன் P4 Proஅறிமுகம் செய்துள்ளது. இந்த இரு போனிலும் மூன்று கேமரா செட்டப், 7,000mAh வரையிலான 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது மேலும் இந்த போனிலும் இருக்கும் பவர்புல் அம்சம் என்ன இதன் விலை தகவல் என்ன என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.

Realme P4 சிறப்பம்சம்.

Realme P4 யின் அம்சம் பற்றி பேசினால், இதில் 6.77-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 1,080×2,392 பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது இதனுடன் இதில் 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 240Hz டச் செம்பளிங் ரேட் வழங்குகிறது மேலும் இதில் 94% ஸ்க்ரீன் பாடி ரேசியோ உடன் இதில் 1600 நிட்ஸ் ப்ரைட்னஸ் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இது HDR10+ மற்றும் HDR சப்போர்டுடன் இதில் நம் கண் பாதுகப்புக்க்க TÜV Rheinland சர்டிபிகேட் உடன் வருகிறது மேலும் இதும் கண்ணை பாதுகாக்கிறது, இதை தவிர லோ லைட் வெளுச்சத்திலும் சிறப்பாக வேலை செய்யும்.

இப்பொழுது இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் P4 யில் MediaTek Dimensity 7400 (MT6878T) சிப்செட் 4nm ஒகட்டா கோர் ப்ரோசெசர் உடன் வருகிறது மேலும் Mali-G615 GPU, மற்றும் NPU655 AI ப்ரோசெசருடன் வருகிறது இதை தவிர 8GB LPDDR4X RAM உடன் மேலும் விர்ஜுவல் +10GB ரேம் வரை ) அதிகரிக்க முடியும் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது ஒப்பரேட்டிங் சிஸ்டமில் Android 15 உடன் ColorOS 15 அவுட் ஆப் தி பாக்ஸ் வழங்கப்படுகிறது.

மேலும் இதன் கேமரா பற்றி பேசினால் P4 50MP OV50D மெயின் மற்றும் 8MP OV08D10 அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது, அதுவே முன் பக்கத்தில் செல்பிக்கு 16MP Sony IMX480 சென்சார் முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது.

கடைசியாக இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் 7,000mAh பேட்டரியுடன் 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 10W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடையாது இதனுடன் இதில் D+ glass பாதுகாப்பு IP65/IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது. மேலும் கனேக்டிவிட்டிக்கு இதில் 5G (SA/NSA), 4G+, VoLTE, VoWiFi, Wi-Fi 6, Bluetooth® 5.4 (aptX HD, LDAC, LHDC 5.0), GPS/GLONASS/Galileo/QZSS, OTG (up to 2TB), மற்றும் USB Type‑C.சப்போர்ட் வழங்கப்படுகிறது

Realme P4 Pro சிறப்பம்சம்.

Realme P4 Pro 6.8-இன்ச் AMOLED கர்வ்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2800×1280 பிக்சல்கள் ரெசளுசன் கொண்டது. இந்த டிஸ்ப்ளே 144Hz ரெப்ரஸ் ரேட் , 240Hz டச் மாதிரி வேரியன்ட் மற்றும் 1800 nits ப்ரைட்னஸ் சப்போர்ட் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 7 Gen 4 சிப்செட்டில் இயங்குகிறது. இது 12GB வரை LPDDR4X RAM மற்றும் 512GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போனில் Android 15-அடிப்படையிலான ColorOS 15 யில் இயங்குகிறது.

கேமரா செட்டிங் OIS உடன் கூடிய 50MP Sony IMX896 ப்ரைமரி சென்சார் மற்றும் பின்புறத்தில் 8MP அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவை அடங்கும். முன்புறத்தில் 50MP கேமரா உள்ளது. இரண்டு கேமராக்களும் 4K 60fps வீடியோ பதிவை ஆதரிக்கின்றன. பேட்டரியைப் பற்றி பேசுகையில், இது ஒரு பெரிய 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 80W SUPERVOOC வேகமான சார்ஜிங்குடன் வருகிறது மற்றும் சுமார் 1 மணி நேரத்தில் 0 முதல் 100% வரை சார்ஜ் செய்யப்படுகிறது. இது 10W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது.

இதனுடன் இந்த போனில் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வோல்யும் பூஸ்ட்க்காக இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் பேஸ் அனலாக் மற்றும் ஆடியோ சப்போர்ட் வழங்கப்படுகிறது, 4G LTE, Wi-Fi 6 (2.4Gbps peak rate), Bluetooth 5.4 உடன் aptX HD & LDAC, GPS/GLONASS/Galileo/QZSS, OTG (up to 2TB), மற்றும் USB Type‑C சப்போர்ட் வழங்குகிறது.

Realme P4 சீரிஸ் விலை தகவல்.

Realme P4 pro விலை பற்றி பேசினால் , இதன் அடிப்படை வேரியன்ட் 8GB\128GB ஸ்டோரேஜ் விலை ரூ,24999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது, அதுவே இதன் 8GB மற்றும் 256 GB ஸ்டோரேஜ் ரூ,26,999 மற்றும் 12GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் விலை ரூ,28,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதன் 8GB\128GB ஸ்டோரேஜ் விலை ரூ,19,999 மற்றும் 8G/256 GB ஸ்டோரேஜ் ரூ,21,999 மற்றும் 12GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் விலை ரூ,23,999க்கும் வாங்கலாம்.

இதையும் படிங்க:Nothing போனில் அதிரடியாக ரூ,28,500 மெகா டிஸ்கவுண்ட்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.

ப்ரோ மாடலின் விற்பனை ஆகஸ்ட் 27 முதல் தொடங்கும், அடிப்படை மாடலின் விற்பனை ஆகஸ்ட் 25 முதல் தொடங்கும். அறிமுக சலுகையின் கீழ், ப்ரோ மாடலில் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மொத்தம் ரூ.5000 சேமிக்க வாய்ப்பு கிடைக்கும், அதாவது ரூ.3000 வங்கி தள்ளுபடி + ரூ.2000 எக்ஸ்சேஞ்ச் சலுகை.

இது தவிர, Realme P4-க்கான மிகப்பெரிய சலுகை இன்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் இயங்கும். இந்த சலுகையில் ரூ.2500 வங்கி சலுகையும் ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அடங்கும்.

ப்ரோ மாடலை பிர்ச் வுட், டார்க் ஓக் வுட் மற்றும் மிட்நைட் ஐவி கலர் விருப்பங்களில் வாங்கலாம். அதேசமயம், அடிப்படை வேரியன்ட் ஸ்டீல் கிரே, என்ஜின் ப்ளூ மற்றும் ஃபோர்ஜ் ரெட் வண்ணங்களில் கிடைக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :