புதிய ரியல்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதாக ரியல்மி ஏற்தகனவே அறிவித்துவிட்டது
ரியல்மி பிராண்டின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இன்டர்நெட்டில் வெளியாகி வருகின்றன. எனினும், இதுபற்றி அந்நிறுவனம் சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அந்த வகையில் ரியல்மி புதிய ஸ்மார்ட்போன் விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.55 இன்ச் FHD பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ப்ளூடூத் 5.0, வைபை வசதி, 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் 50 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இது ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்படுமா அல்லது டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்படுமா என்பது குறித்து தற்சமயம் எவ்வித தகவலும் இல்லை. சாப்ட்வெர் பொருத்தவரை ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மற்றும் கலர்ஓ.எஸ். 6.1 வழங்கப்படலாம். இத்துடன் கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.
புதிய ரியல்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதாக ரியல்மி ஏற்தகனவே அறிவித்துவிட்டது. தற்சமயம் ப்ளூடூத் தளத்தில் இடம்பெற்றிருக்கும் ரியல்மி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.
ப்ளூடூத் சான்றிதழ் தளத்தில் ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்றிருந்ததாக ட்விட்டரில் தகவல் வெளியாகியிருக்கிறது. RMX1931 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்களும் தெரியவந்துள்ளது. ஃபிளாக்ஷிப் தர ஸ்மார்ட்போன் என்பதால் இதில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.