Realme Narzo 90 5G india launch date and features revealed
Realme அதன் புதிய இரண்டு ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அதன் இரண்டு போனையும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய போன் Narzo 90 சீரிஸ் கீழ் வருகிறது, இதில் Realme Narzo 90 5G மற்றும் Narzo 90x 5G. ஆகிய இரண்டு போன்கள் அறிமுகம் செய்யப்படும் மேலும் இந்த போனின் அறிமுக விலை மற்றும் எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Realme Narzo 90 seeris இந்தியாவில் டிசம்பர் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். இரண்டு சாதனங்களும் விரைவில் Amazon மற்றும் Realme இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கும்.
Realme Narzo 90 5G ஸ்மார்ட்போனில் 6.8-இன்ச் AMOLED ஸ்க்ரீன் உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1400 nits ப்ரைட்னஸ் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டோ எடுப்பதற்கு, இந்த போனில் 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 2MP செகண்டரி லென்ஸ் உள்ளிட்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ காளிர்க்க்க முன்பக்கத்தில் 50MP கேமராவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி நார்சோ 90 5G ஸ்மார்ட்போன், மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் சிப்செட் மூலம் இயக்கப்படும், இது UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 60W பாஸ்ட் சார்ஜிங்குடன் 7000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும், மேலும் இது ரியல்மி UI 6.0 யில் இயங்கும். இந்த போன் eSIM-ஐ சப்போர்ட் செய்கிறது. இந்த போனில் இரண்டு கலர் விருப்பங்களில் வரும்: விக்டரி கோல்ட் மற்றும் கார்பன் பிளாக் கலரில் வாங்கலாம்.
இதையும் படிங்க:மிகவும் பாப்புலர் போனான Motorola இந்த மாடலுக்கு ரூ,10,109 அதிரடி டிஸ்கவுண்ட்
Realme Narzo 90x 5G ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில் 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1200 nits ப்ரைட்னஸ் ஆகியவை கொண்டுள்ளது, மேலும் இந்த போனில் போட்டோ எடுப்பதற்கு, இந்த போனில் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 2MP செகண்டரி லென்ஸை உள்ளடக்கியிருக்கலாம். செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிற்காக 8MP முன் கேமராவையும் கொண்டுள்ளது.
Realme Narzo 90x 5G ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும், ரியல்மி UI 6.0 யில் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது 60W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 7000mAh பேட்டரியையும் கொண்டிருக்கும். கடைசியாக, இந்த போன் இரண்டு கலர் விருப்பங்களில் வழங்கப்படும்: ஃப்ளாஷ் ப்ளூ மற்றும் நைட்ரோ ப்ளூ ஆகிய கலரில் கிடைக்கும் .