Realme கடந்த வாரம் அதன் புதிய ஸ்மார்ட்போன் Realme Narzo 80 Pro 5G மற்றும் Realme Narzo 80x 5G அறிமுகம் செய்தது, அதனை தொடர்ந்து இந்த போன்களின் முதல் விற்பனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் இன்று தொடங்கியது மேலும் இன்று இந்த விற்பனையின் மூலம் ஸ்பெஷல் கூப்பன் கேஷ்பேக் நன்மையும் பெறலாம், மேலும் Realme Narzo 80 Pro 5G மற்றும் Narzo 80x 5G யின் சலுகைக்கு பிறகு எவ்வளவு விலை என்பதை பார்க்கலாம் வாங்க.
Realme Narzo 80x 5G ஸ்மார்ட்போன் 6+128GB சேமிப்பு வகையின் விலை ரூ.13,999 ஆகவும், 8+128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.14,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் கூப்பன் சலுகையாக ரூ, 1500 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 11,999ரூபாயில் வாங்கலாம் மேலும் இதன் மறுபக்கம் Realme Narzo 80 Pro 5G ஸ்மார்ட்போன் 8+128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.19,999 ஆகவும், 8+256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.21,499 ஆகவும், 12+256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.23,499 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் கூப்பன் ஆபர் சலுகையாக ரூ,2000 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,17,000 யில் வாங்கலாம்.
டிஸ்ப்ளே: Realme Narzo 80x யின் அம்சம் பற்றி பேசினால் இதில் 6.72 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது மேலும் இது Eye Comfort டிஸ்ப்ளே இருக்கிறது.
பர்போமான்ஸ்:- இந்த போனின் பர்போமான்ஸ் பற்றி பேசினால், இதில் MediaTek Dimensity 6400 சிப்செட் உடன் இதில் 6nm ப்ரோசெசஸ் மூலம் மிக சிறந்த அனுபவத்தை வழங்கும் மேலும் இது கேமர்களுக்கு சிறப்பனதாக இருக்கும்.
சாப்ட்வேர் :-இதன் சாப்ட்வேர் பற்றி பேசுகையில் இது Android 15 யின் அடிபடையின் கீழ் realme UI 6.0 உடன் வருகிறது
கேமரா: போட்டோ எடுப்பதற்கு இதில் , பின்புறத்தில் 50MP ப்ரைமரி கேமராவும், 2MP போர்ட்ரெய்ட் சென்சார் கேமராவும் உள்ளன. முன்பக்கத்தில், 8MP செல்ஃபி கேமரா உள்ளது, இது அடிப்படை செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு சிறந்தது.
பேட்டரி:-Realme Narzo 80x 5G யின் பேட்டரி பற்றி பேசினால் இது 6000mAh பேட்டரியுடன் இதில் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது. மேலும் இது IP69 டஸ்ட் மற்றும்வட்டார் ரெசிஸ்டன்ட் உடன் வருகிறது.
டிஸ்ப்ளே :-இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 2392 × 1080 பிக்சல் ரெஜோல்யூஷன் உடன் 6.77-இன்ச் . ஃபுலச்சடி+ டிஸ்ப்ளே உடன் இதில் பன்ச் ஹோல் ஸ்டைல் கொண்டுள்ளது மேலும் இது 120HZ ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது
பர்போமான்ஸ்:-இதன் பர்போமான்ஸ் பற்றி பேசினால், இதில் MediaTek Dimensity 7400 சிப்செட் வழங்குகிறது மேலும் இதில் 90fps போன்ற கேம் 90fps யில் விளையாட முடியும்.
கேமரா:-இந்த போனின் கேமரா பற்றி பேசினால் இது டுயல் கேமரா செட்டப் உடன் 50மேகபிக்சல் மெயின் கேமராவுடன் வருகிறது மற்றும் இதில் 2-மெகாபிக்சல் சென்சார் வழங்குகிறது
பேட்டரி:-இதன் பேட்டரி பற்றி பேசினால், 6,000mah பேட்டரியுடன் 80W அல்ட்ரா சார்ஜ் வசதியுடன் வருகிறது P69 Top-Tier வாட்டார்proof உடன் வருகிறது.
இதையும் படிங்க OnePlus 12 போனில் அதிரடியாக ரூ.19,001 குறைப்பு ஆபர் நன்மை எப்படி பெறுவது என பார்க்கலாம் வாங்க