புதிய REALME NARZO 10 மற்றும் REALME NARZO 10A சீரிஸ் மே 11 அறிமுகமாகும்.

Updated on 08-May-2020
HIGHLIGHTS

தற்போதைய டீசர்களின் படி புதிய ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது

ரியல்மி நார்சோ 10 மற்றும் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மே 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுக நிகழ்வு யூடியூபில் நேரலை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் இந்த ஸ்மார்ட்போன் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் வசிப்போர் வாங்க முடியும். இந்தியாவில் ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி ரூ.15 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போதைய டீசர்களின் படி புதிய ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது.இதுவரை ஆங்கில எழுத்துக்களை தழிவியே ஸ்மார்ட்போன் சீரிஸ் இருந்து வரும் நிலையில், புதிய சீரிஸ் பெயர் வித்தியாசமாக இருக்கிறது. 

புதிய நார்சோ சீரிஸ் அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றும் இது ஜெனரேஷன் இசட் பிரிவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருவதாக ரியல்மி தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரியல்மி பிராண்டு ப்ரோ சீரிஸ், எக்ஸ் சீரிஸ், சி சீரிஸ், யு சீரிஸ் உள்ளிட்டவற்றில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :