Realme GT Neo 2 இந்திய அறிமுக தேதி அறிவிப்பு.எல்லாமே தெரிஞ்சிக்கோங்க.

HIGHLIGHTS

Realme தனது Realme GT Neo 2 ஸ்மார்ட்போனை அக்டோபர் 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது,

Realme GT Neo 2 மொபைல் போன் Realme GT Neo தலைமுறையின் புதிய மொபைல் போனாக இருக்கும்

ரியல்மி ஜிடி நியோ 2 போனில் ஒரு புதிய ஹார்ட்வேர் அமைப்பு நடக்க இருப்பதாக நம்பப்படுகிறது.

Realme GT Neo 2  இந்திய  அறிமுக தேதி  அறிவிப்பு.எல்லாமே தெரிஞ்சிக்கோங்க.

Realme தனது Realme GT Neo 2 ஸ்மார்ட்போனை அக்டோபர் 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது, இதை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அதாவது RealMe. இது தவிர, இந்த போனை வெளியிடுவதற்கு realme ஊடகங்களையும் அழைக்கத் தொடங்கியுள்ளது. Realme GT Neo 2 மொபைல் போன் Realme GT Neo தலைமுறையின் புதிய மொபைல் போனாக இருக்கும். இந்த மொபைல் போன் சீனாவில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இந்தியாவிற்கு கொண்டு வரப்படவில்லை. ரியல்மி  இந்தியாவில் ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5 ஜி யை இதே போன்ற சில விவரக்குறிப்புகளுடன் அறிமுகப்படுத்தினாலும். ரியல்மி ஜிடி நியோ 2 போனில் ஒரு புதிய ஹார்ட்வேர் அமைப்பு நடக்க இருப்பதாக நம்பப்படுகிறது. இது ஷாப்பிங் சீசனின் சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme GT Neo 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 13 அன்று பிற்பகல் 12:30 மணிக்கு (IST) நிறுவனத்தின் யூடியூப் மற்றும் பேஸ்புக் சேனல் மூலம் அறிமுகப்படுத்தப்படும் என்று Realme இணையதளத்தில் உள்ள பிரத்யேக மைக்ரோசைட் வெளிப்படுத்துகிறது.

அதே மைக்ரோசைட் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களையும் உறுதிப்படுத்துகிறது. ஆனால் ஸ்மார்ட்போனின் விலை இப்போதைக்கு தெரியவில்லை. அதன்வழியாக குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 SoC மூலம் இயக்கப்படும் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சாம்சங் இ 4 அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டு வரும் என்று ரியல்மி குறிப்பிடுகிறது

மைக்ரோசைட்டின் படி, ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்னாப்டிராகன் 870 SoC ஆல் இயக்கப்படும். இந்த சிப்செட் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் வரவிருக்கும் ரியல்மி ஸ்மார்ட்போன் 65W சூப்பர் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யும் என்றும் மைக்ரோசைட் குறிப்பிடுகிறது.

இது தவிர இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் சாம்சங் இ 4 அமோலெட் டிஸ்ப்ளேவை பேக் செய்யும். இந்த டிஸ்ப்ளே 15 சதவிகிதம் குறைவான மின் நுகர்வு கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரியல்மி ஜிடி நியோ 2 நியோ – பிளாக், நியோ ப்ளூ மற்றும் நியோ கிரீன் போன்ற வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். மேலும், ஸ்மார்ட்போனில் துருப்பிடிக்காத ஸ்டீல் வெப்பர் கூலிங் அமைப்பும் (stainless steel vapour cooling system) உள்ளது, இது ப்ராசஸரின் முக்கிய வெப்பநிலையை 18 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, இது கடந்த செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் சீன வேரியண்ட்டில் நாம் பார்த்த அம்சங்களை கடன் வாங்கலாம்

சீன மாறுபாடு 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரையும் கொண்டுள்ளது. இந்திய வேரியண்ட்டிலும் இதே போன்ற அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் சீன விலை விவரங்கள்:

ரியல்மி ஜிடி நியோ 2 – 8 ஜிபி + 128 ஜிபி – தோராயமாக ரூ.28,500
ரியல்மி ஜிடி நியோ 2 – 8 ஜிபி + 256 ஜிபி தோராயமாக ரூ.30,800
ரியல்மி ஜிடி நியோ 2 – 12 ஜிபி + 256 ஜிபி – தோராயமாக ரூ.34,200

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile