Realme GT 7 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இந்த சீரிஸ் கீழ் Realme GT 7 மற்றும் GT 7T ஆகியவை அடங்கும். மேலும் இந்த போன் MediaTek Dimensity 9400e சிப்செட் ப்ரோசெசர் உடன் இதில் Android 15 அடிபடையின் கீழ் இது ColorOS 15.0.1 யில் இயங்குகிறது மேலும் இதன் அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Realme GT 7 விலை
இந்த போன் ஐசென்ஸ் ப்ளூ, ஐசென்ஸ் பிளாக் மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் கிரீன் கலர்களில் கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.39,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்திற்கு நீங்கள் ரூ.42,999 செலவிட வேண்டும். இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.46,999 ஆகும்.
Realme GT 7T விலை
Realme GT 7T இன் அடிப்படை வேரியன்ட் 8GB RAM மற்றும் 256B ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை ரூ.34,999. இதன் இரண்டாவது மாடலில் 12 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது, இதன் விலை ரூ.37,999. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு கொண்ட டாப் எண்ட் மாடலின் விலை ரூ.41,999 ஆகும். ஐசென்ஸ் ப்ளூ, ஐசென்ஸ் பிளாக் தவிர, மஞ்சள் நிற மாறுபாட்டிலும் இதை வாங்கலாம்.
இந்த போன்களுடன் ரூ.3000 வரை வங்கிச் சலுகையையும் நிறுவனம் வழங்குகிறது. இது தவிர, பரிமாற்றச் சலுகையில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது
Realme GT 7 யில் 6.78 இன்ச் கொண்ட AMOLED ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் ரேசளுசன் 1.5K (2780 × 1264) மற்றும் 20:9 ஈஸ்பெக்ட் ரேசியோ வழங்குகிறது. இதனுடன் இதில் ஸ்க்ரீன் டு பாடி ரேசியோ 93.9% இருக்கிறது மேலும் இந்த போனில் 120 Hz வரையிலான ரெப்ராஸ் ரேட் மற்றும் 360 Hz செம்பளிங் ரெட்டுடன் வருகிறது. இதில் HDR10+ சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது . இதனுடன் இதில் Gorilla Glass GG7i ப்ரோடேக்சன் வழங்குகிறது .
Realme GT 7 யின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் ஒகட்டா கோர் MediaTek Dimensity 9400e (4nm) ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் Arm Immortalis-G720 GPU உடன் வருகிறது. மேலும் இந்த போனில் 16GB வரையிலான ரேம் LPDDR5X RAM மற்றும் 1TB வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் வழங்குகிறது. மேலும் இதன் வெர்சுவல் ரேம் 12GB வரை அதிகரிக்க முடியும்.
போட்டோ எடுப்பதற்காக, இந்த போனில் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் பின்புறத்தில் 50MP வைட் சென்சார், 8MP அல்ட்ரா-வைட் மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. இது 20x டிஜிட்டல் ஜூம் உடன் வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு போனின் முன்புறத்தில் 32MP கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Realme GT 7 யின் பேட்டரி பற்றி பேசினால் இதில் 7000mAhபேட்டரியுடன் இதில் 120W SuperVOOC சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. மேலும் நிறுவனத்தின் படி 0-100% வரை சார்ஜ் ஆகிவிடும்
போனில் 5G SA/NSA, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC மற்றும் டுயல் -சிம் /இ-சிம் (EU/) சப்போர்ட் இருக்கிறது இது டுயல் பெட் GPS, NavIC மற்றும் USB 2.0 Type-C சப்போர்டுடன் ஆடியோவில் Hi-Res சர்டிபிக்சன், டுயல் ஸ்பீக்கர் மற்றும் டுயல் -மைக் நோய்ஸ் கேன்சிலேசன் இருக்கிறது. IP66/IP68/IP69 ரேட்டிங் உடன் வாட்டர் வாட்டர் ப்ரூப் ஆகியவை வழங்குகிறது.
மேலும் இந்த போனில் இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் வழங்குகிறது (780ms), பேஸ் ரேகக்னேசன் (750-980ms), IR ப்ளாஸ்டர் ,மற்றும் 39103 mm² கூலிங் சிஸ்டம் இருக்கிறது. மேலும் இந்த போனில் PUBG/BGMI (120fps, ), Freefire (90fps) மற்றும் COD (120fps)போன்ற கேம்களை ஸ்மூத்தாக விளையாட முடியும்.
Realme GT 7T பற்றி பேசினால் இதில் 6.8-இன்ச் யின் Full HD AMOLED ஸ்க்ரீன் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது இந்த போன் Android 15 மற்றும் ColorOS 15.0 யில் வேலை செய்கிறது.மேலும் இந்த போனில் ஒகட்டா கோர் MediaTek Dimensity 8400-MAX ப்ரோசெசர் வழங்குகிறது. இதனுடன் இந்த போனில் 12GB வரை ரேம் LPDDR5X RAM மற்றும் 512GB வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
மேலும் இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் இரட்டை கேமரா செட்டப் வழங்குகிறது அதில் ப்ரைமரி கேமரா 50MP இருக்கிறது மற்றும் இதில் 50MP செகண்டரி கேமரா இருக்கிறது இதனுடன் இதில் செல்பிக்கு முன் பக்கத்தில் 32MP கேமரா வழங்கப்படுகிறது
இதனுடன் இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால் இதில் 700mAh பேட்டரியுடன் 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இது Realme GT 7 போன்ற அம்சம் கொண்டுள்ளது.
இதையும் படிங்க Alcatel V3 Classic மற்றும் Alcatel V3 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் ரூ,2000 டிஸ்கவுண்ட் உடன் வாங்கலாம்