ரியல்மீ புதிய ஜிடி தொடர் ஸ்மார்ட்போன் Realme GT 5G உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது.Realme GT 5G ஸ்னாப்டிராகன் 888 ப்ரோசெசருடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, 12 ஜிபி ரேம் வரை மற்றும் 120 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்துடன் AMOLED டிஸ்ப்ளே. Realme GT 5G யில் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கும். இது தவிர, டால்பி அட்மோஸ் ஆடியோவும் போனில் ஆதரிக்கப்பட்டுள்ளது. போனுடன், நிறுவனம் ரியல்மீ டெக்லைஃப் ரோபோ வெற்றிட கிளீனரையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது iRobot Roomba 971 और Xiaomi Mi Robot உடன் போட்டியிடும். நிறுவனம் தனது வரவிருக்கும் லேப்டாப் மற்றும் டேப்லெட்டின் டீஸரை வெளியிட்டுள்ளது, இருப்பினும் இது அறிமுகம் குறித்து எந்த தகவலையும் கொடுக்கவில்லை.
புதிய ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 120 ஹெர்ட்ஸ் சாம்சங் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, பன்ச் ஹோலில் 16 எம்பி செல்பி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் + காப்பர் விசி கூலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் சூப்பர்டார்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0 கொண்டிருக்கும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கிறது.
ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ரேசிங் எல்லோ, டேஷிங் சில்வர் மற்றும் டேஷிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 449 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 39,872, 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை 559 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 49,620 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளத