Realme வெறும் ரூ,10,000 பட்ஜெட்டில் புதிய போன் அறிமுகம் 6000mAh பேட்டரியுடன் கலக்கும் போன்

Updated on 02-Jun-2025
HIGHLIGHTS

Realme இந்திய சந்தையில் அதன் புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போனான Realme C73 5G அறிமுகம் ,

இந்த போனில் 6000mAh Battery, MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் ஆகியவை கொண்டிருக்கும்

4GB + 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.10,499 ஆகவும் , 4GB + 128GB சேமிப்பு வகையின் விலை ரூ.11,499

Realme இந்திய சந்தையில் அதன் புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போனான Realme C73 5G போனை அறிமுகம் செய்தது, மேலும் இந்த போனில் 6000mAh Battery, MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் ஆகியவை கொண்டிருக்கும், மேலும் இந்த போன் ஒரு ரூ,10,000 ரேஞ்சில் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இதன் டாப் அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Realme C73 5G விலை தகவல்

Realme C73 5G ஸ்மார்ட்போனின் 4GB + 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.10,499 ஆகவும் , 4GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.11,499 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலர் விருப்பங்களைப் பொறுத்தவரை, இந்த போனில் ஜேட் கிரீன், கிரிஸ்டல் பர்பிள் மற்றும் ஓனிக்ஸ் பிளாக் ஆகியவற்றில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டிலும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த அறிமுகச் சலுகையின் கீழ், அனைத்துபேங்க்களின் கார்ட் மூலம் பணம் செலுத்தினால் ரூ.500 நிலையான தள்ளுபடியைப் பெறலாம்.

Realme C73 5G அம்சம்.

டிஸ்ப்ளே :- Realme C73 5G போனில் 6.67 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே உடன் இதில் 720×1604 பிக்சல் ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது.

ப்ரோசெசர் :- மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 6300 SoC சிப்செட் கொண்டுள்ளது மேலும் இது மாலி G57 MC2 GPU வழங்கப்படுகிறது மேலும் இதில் 4GB LPDDR4X RAM மற்று 64GB / 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

கேமரா :-மேலும் இந்த போனில் கேமராகேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், C73 5G இன் பின்புறத்தில் 32 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட செகண்டரி சென்சார் கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்காக f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

இதையும் படிங்க அறிமுகத்திற்கு ரெடியாகும் Google Pixel 10 எப்போ எங்கே தெரியுமா விலை அம்சம் எல்லாம் எப்படி இருக்கும்

பேட்டரி:- ஈப்போலுது கடைசியாக பேட்டரி என வரும்போது இதில் 6000mAh பேட்டரியுடன் இதில் 15W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது. இதை தவிர இதில் செக்யுரிட்டிக்கு சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார், மேலும் இதன் டைமென்சன் பொறுத்தவரை இந்த போனில் நீளம் 165.7mm, அகலம் 76.22mm மற்றும் 7.94mm திக்னஸ் உடன் இதன் மொத இடை 197 கிராம் இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :