ஒப்போ நிறுவனத்தின் சப் ப்ராண்ட் சர்வதேச சந்தையில் ரியல்மியின் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்தார். ரியல்மி நிறுவனர் ஸ்கை லீ உடனான சந்திப்புக்கு பின் மாதவ் இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார்.
ரியல்மி தனது 5ஜி ஸ்மார்ட்போனின் சோதனையை துவங்கி இருக்கிறது. இதனை உறுதி செய்யும் வகையில் ரியல்மி நிறுவனர் மற்றும் இந்திய தலைமை செயல் அதிகாரி என இருவரும் கையில் போனினை வைத்திருக்கும் புகைப்படம் இருக்கிறது. இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை மிக விரைவில் அறிமுகம் செய்ய முயற்சிப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் பாப்-அப் கேமரா வடிவமைப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ரியல்மியின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய புதிய விவரங்கள் வரும் மாதங்களில் வெளியாகும் என தெரிகிறது.
இதுதவிர ரியல்மி விரைவில் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ரியல்மி X ப்ரோ என்ற பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது
Know more here to click this link
https://twitter.com/MadhavSheth1/status/1136579691173879809