இதுவரை வெளியான ரியல்மி ஸ்மார்ட்போன்களிலேயே ரியல்மி 5 ஸ்மார்ட்போனிற்கு அதிக பவர் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் 4230Mah . பேட்டரி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரியல்மி 5 ஸ்மார்ட்போனில் 5000Mah . பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ஆகஸ்ட் 20 திதி அறிமுகம் செய்யப்படு எனவும் தெறிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ. 10,000 விலைக்குள் கிடைக்கும் நான்கு கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மி 5 இருக்கும் என ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்தார்.
https://twitter.com/MadhavSheth1/status/1161855126740430849?ref_src=twsrc%5Etfw
ரியல்மி 5 ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும் ரியல்மி 5 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதுதவிர இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களிலேயே புதிய ரியல்மி 5 சக்திவாய்ந்த குவால்காம் சிப்செட் கொண்டிருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 655 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.