15,000mAh பவர் புல் பேட்டரி மற்றும் World First AC போன், இனி இந்த போன் உங்களை சில்லுனு வைக்கும் எந்த Brand பாருங்க

Updated on 28-Aug-2025

புதன்கிழமை சீனாவில் Realme தனது 828 Fan விழாவை நடத்தியது, அங்கு அதன் சமீபத்திய இரண்டு கான்செப்ட் ஸ்மார்ட்போன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த பிராண்ட் 15,000mAh பேட்டரியுடன் கூடிய ஒரு கான்செப்ட் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இந்த போன் 50 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்கும் மற்றும் பிற டிவைஸ் போல ரிவர்ஸ் சார்ஜ் செய்ய அனுமதிக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், Chill ஃபேன் போன் உள்ளே விசிறியுடன் வருகிறது, அதாவது நீங்கள் இந்த போனை வைத்திருக்குமோது சில்லென காற்று வருவதை உணர்விர்கள் மேலும் இந்த போனை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Realme கான்செப்ட் போன் எப்படி

Realme அதன் 828 Fan விழாவில் லைவ் ஸ்ட்ரீம் செய்தது அதில் இந்த போனில் 15,000mAh பேட்டரியுடன் ஷோ கேஸ் செய்யப்பட்டது இது ஒரு சிறிய மின் நிலையமாக விளம்பரப்படுத்தப்படுகிறது, இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் அணியக்கூடிய டிவைஸ் போன்ற பிற டிவைஸ் போல வயர்ட் கனெக்ஷன் வழியாக சார்ஜ் செய்யப் பயன்படுகிறது. அதன் பெரிய பேட்டரி பவர் அதிகம் இருப்பதன் காரணமாக, ஒரே சார்ஜில் பயனர்கள் 25 திரைப்படங்களை தொடர்ச்சியாகப் பார்க்கலாம் என ரியாமி துணைத் தலைவர் சேஸ் சூவின் கூறினார்.

இதனுடன் இந்த Realme கான்செப்ட் போனில் 18 மணி நேர வீடியோ ரெக்கார்டிங் மட்டுமில்லாமல் 30 மணி நேரம் கேமிங் சாதாரண பயன்பாட்டில் ஐந்து நாட்கள் வரை, மற்றும் பிளைட் மோடில் இருக்கும்போது மூன்று மாதங்கள் வரை பேக்கப் நேரம் கிடைக்கும்.

Realme கான்செப்ட் அம்சங்கள் என்ன

இந்த கைபேசி PKP110 என்ற மாடல் எண்ணைக் கொண்டு காட்டப்பட்டது. ரியல்மி கான்செப்ட் போனின் About பக்கத்திலும் 6.7-இன்ச் டிஸ்ப்ளே சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. டீஸர் படங்கள் போனின் பின்புறத்தில் இரட்டை பின்புற கேமரா அமைப்பை வெளிப்படுத்துகின்றன. இது சில்வர் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது, பின்புற பேனலில் 15,000mAh பிராண்டிங் உள்ளது.

, ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ரியல்மி UI 6.0 இல் இயங்கும் சமூக ஊடகங்களில் இந்த கைபேசி காணப்பட்டது . இது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 செயலி மூலம் இயக்கப்படுகிறது, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ரேம் மெய்நிகராக மற்றொரு 12 ஜிபி மூலம் மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், ரியல்மி சில் போனில் உள்ளமைக்கப்பட்ட கூலிங் ஃபேன்கள் இருப்பதால் அதற்கு அப்படிப் பெயரிடப்பட்டது. இது “built-in AC ” கொண்டதாகக் கூறப்படுகிறது. டீஸர் வீடியோவில் போனின் இடது பக்கத்தில் ஒரு வென்ட் கிரில் உள்ளது, அதன் வழியாக காற்று வெளியேறக்கூடும் என்பதைக் குறிக்கிறது. ரியல்மி துணைத் தலைவரின் கூற்றுப்படி, கூலிங் சிஸ்டம் போனை 6 டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்க உதவுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :