Realme இன்று அதன் Realme 15 pro 5G மற்றும் Realme 15 போன் அறிமுகமானது இந்த இரு போனிலும் மிக சிறந்த AI அம்சத்துடன் இது 7000Mah பேட்டரியுடன் வந்தாலும் ஸ்ளிம்மஸ்ட் போனாக இருக்கிறது மிரளும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Realme 15 pro 5G யின் அம்சங்களை பற்றி பேசினால் இதில் 6.8 இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் 144HZ ரெப்ராஸ் ரெட்டுடன் இதன் (1200X2800)பிக்சல் ரெசளுசனுடன் 6500 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் வரும் இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்குகிறது மேலும் இதில் வாட்டார் ப்ரூப் பாதுகாப்புகாக IP69 ரேட்டிங் வழங்கப்படுகிறது .
இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 7 gen 4 சிப்செட்டுடன் 4nm ப்ரோசெசரில் இயங்குகிறது இதில் AI எடிட் அம்சம் கொண்டுள்ளது, மேலும் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது
இந்த போன் இரண்டு ரேம் விருப்பங்களில் வருகிறது, 8GB மற்றும் 12GB LPDDR4. இதை மெய்நிகராக 14GB வரை விரிவாக்கலாம். சேமிப்பக விருப்பங்களில் 128GB, 256GB மற்றும் 512GB UFS 3.1 அடங்கும். இருப்பினும், இது மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்கிறது.
மேலும் இதன் கேமரா பற்றி பேசினால், Realme 15 Pro-வைப் பொறுத்தவரை, இது OIS-ஐ ஆதரிக்கும் Sony IMX896 உடன் 50MP பின்புற ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில், Pro மாடலில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ காளிற்காக 50MP OV50D சென்சார் உள்ளது. இது தவிர, கேமரா முன் மற்றும் பின்புறம் இரண்டிலும் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் வழங்கும்.Realme 15 Pro போனில் 7000mAh பேட்டரி 80W SUPERVOOC சார்ஜிங் கொண்டுள்ளது
Realme 15 ஸ்மார்ட்போன் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 6.77-இன்ச் குவாட்-வளைந்த AMOLED பேனலுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4,500 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i உடன் பாதுகாக்கப்படுகிறது.
ஹூட்டின் கீழ், ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 7300 Energy 5G சிப்செட் மூலம் 8GB LPDDR4X வரை மற்றும் 256GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 7000mAhபேட்டரி மற்றும் 80W SUPERVOOC சார்ஜிங்குடன் சப்போர்ட் செய்கிறது. இது Android 15-அடிப்படையிலான Realme UI 6.0 யில் இயங்குகிறது.
கேமராவைப் பற்றிப் பேசுகையில், இந்த போனில் 50MP பிரைமரி ஷூட்டர் மற்றும் 8MP அல்ட்ராவைடு சென்சார் உடன் வருகிறது. செல்ஃபிக்களுக்கு, இந்த போனில் 16MP முன்பக்க கேமராவுடன் வருகிறது.
இதையும் படிங்க:iQOO யின் புதிய போன் அறிமுகம் வெறும் ரூ,20,000க்குள் வரும் இந்த போனில் தரமான AI அம்சம்
இந்த போன் Flowing Silver, Velvet Green மற்றும் Silk Pink கலர்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Realme 15 5G-யின் விலையைப் பற்றிப் பேசுகையில், அதன் அடிப்படை வேரியண்டில் 8GB RAM உடன் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. இதன் விலை ரூ.25,999. 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.27,999 ஆக உள்ளது. டாப் வேரியண்டில் 12GB RAM உடன் 256GB ஸ்டோரேஜ் உள்ளது. இதன் விலை ரூ.30,999. இதற்கு ரூ.2 ஆயிரம் வரை பேங்க் சலுகையையும் நிறுவனம் வழங்குகிறது.
இந்த போன் Flowing Silver, Velvet Green மற்றும் Silk Purple கலர் விருப்பங்களில் வருகிறது. Realme 15 Pro 5G இன் விலையைப் பற்றி பேசுகையில், அதன் அடிப்படை வேரியண்டில் 8GB RAM உடன் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. இதன் விலை ரூ.31,999. 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.33,999. 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை ரூ.35,999. டாப் வேரியண்டில் 12GB RAM உடன் 512GB ஸ்டோரேஜ் உள்ளது. இதன் விலை ரூ.38,999. இதற்கு ரூ.3000 வரை பேங்க் சலுகையையும் நிறுவனம் வழங்குகிறது.