Xiaomi Mi A1 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

Xiaomi Mi A1 ஸ்மார்ட்போன் மீது ரூபாய்.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுவதாக சியோமி அறிவித்துள்ளது

சியோமி குறைந்த  விலை மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமாக இருக்கிறது. இந்திய ஸ்மார்ட்போன் பஜாரில்  சியோமி நிறுவனம் உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில், சியோமி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் Mi A1 கடந்த செப்டம்பர் மாதம் ரூபாய்.14,999 விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. கடந்த வாரம் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற சிறப்பு விற்பனையில் ரூ.2,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டது.

இதே விலையில் சியோமியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலும்  விற்பனை செய்யப்பட்டது. தற்போது, இந்த ஸ்மார்ட்போன் மீது ரூபாய்.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுவதாக சியோமி அறிவித்துள்ளது.

சியோமி Mi A1 சிறப்பம்சங்கள்:

# 5.5 இன்ச் ஃபுல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ்

# 4 ஜிபி ராம், 64 GBஇன்டெர்னல் மெமரி, 3080 MAH பேட்டரி

# 12 MB + 12 MB பிரைமரி கேமரா, 5 MB செல்ஃபி கேமரா

# ஸ்மார்ட்போனை தொலைகாட்சிகளுடன் இணைக்கும் வசதி, செட் டாப் பாக்ஸ், குளிர்சாதன பெட்டி, ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு சாதனங்களின் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

# விலை குறைப்பிற்கு பின்னர் சியோமி Mi A1 ஸ்மார்ட்போனினை ரூ.பாய் 13,999 விலையில் வாங்க முடியும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :